Jokes: அதிகாலையிலேயே இப்படி வடை, போண்டாவை சுட்டு வச்சா.. யாரு மேன் சாப்பிடுவாங்க!

Sep 11, 2024,06:21 PM IST

சென்னை: சாப்பிட்டு டயர்டாயிருச்சா மக்களே.. தூக்கம் தூக்கமா வருதா.. அட வாங்க நாலு ஜோக்ஸ் படிச்சுட்டு Refresh ஆகலாம். கடி ஜோக்ஸா இருந்தாலும் கலகலன்னு சிரிச்சுட்டு வேலையைப் பார்த்தா அப்படி ஜம்முன்னு இருக்கும்.

வடையெல்லாம் யாருக்கு!

கடைக்கு வடை திண்ண வந்தவர்: விடிகாலை ஆறு மணிக்கே வடை போண்டா பஜ்ஜின்னு இப்படி சுட்டுக் குவிச்சு வச்சிருக்கீங்களே.. யார் இந்த நேரத்தில் இதையெல்லம் தின்பா கடைக்காரரே?

கடைக்காரர்: வாக்கிங் போறவங்கதான்!!

--

ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க கடவுளே!



அவன்: நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான்

இவன்: அதான் அவன் நல்லவன்னு தெரியுதே.. பிறகு எதுக்கு சோதிச்சு டைம் வேஸ்ட் பண்ணனும்


--

அதுக்கு 1,2,3 தெரியாது டீச்சர்!


டீச்சர்: கோழி ஏன் முட்டை போடுது.. சொல்லுங்க பார்ப்போம்

மாணவன்:  ஏன்னா அதுக்கு 1, 2, 3 இதெல்லாம் போடத் தெரியாது டீச்சர் அதான்!

--

25 வருஷத்துலே ஒரே ஒரு முறைதான்

மாலா: என்னம்மா சொல்ற.. இந்த 25 வருஷத்துல ஒரே ஒரு தடவைதான் உங்க புருஷன் கூட சண்டை போட்டிருக்கீங்களா.. ஆச்சரியமா இருக்கே!

கமலா: ஆமா.. அந்த சண்டைக்குப் பிறகு அவர் வீட்டை விட்டுப் போனவர்தான்.. 25 வருஷமாச்சு இன்னும் திரும்பி வரலை!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்