கலைஞர் 100 விழா.. வேற லெவல் ஏற்பாடுகள்.. நேரு ஸ்டேடியம்  இல்லையாம்.. சேப்பாக்கமாம்!

Nov 21, 2023,05:06 PM IST

சென்னை: கலைஞர் 100 விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதை விட பிரமாண்டமான, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.


இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி திரைப்பட தயாரிப்பாளர்கள் இதை அறிவித்துள்ளனர். இதுதொடர்பான பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், ராமசாமி, ஆர்.கே.செல்வமணி, கே. ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் கூறியதாவது:


திரையுலகின் மற்ற  சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில்,  மறைந்த கருணாநிதி அவர்கள் ஆற்றிய  மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் "கலைஞர் 100" எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் டிசம்பர் 24ம் தேதி ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.


கருணாநிதி அவர்கள் திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார்.


நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத் தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.




தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு  படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள். அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி,  என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.


கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமலஹாசன் அவர்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், இசைஞானி இளையராஜா அவர்களும்  கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்


இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்   என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.  சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. 


இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.     நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம். இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள்  தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது. 




இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், செய்தித்துறை அமைச்சர் அவர்களும், மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். 


இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும்,  துமக்களுக்கும்

விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்