சென்னை: கனமழை காரணமாக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கு நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் வழக்கம்போல் அது செயல்படுகிறது.
சென்னை கதீட்ரல் சாலையில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துவந்த 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, ரூ.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமாக உலகத்தரத்திலான பூங்காவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இந்தப் பூங்காவில் இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை, என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பூங்காவுக்கு கலைஞர் நூற்றாண்டு பூங்கா எனப் பெயரிடப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக விடப்பட்டது. பூங்காவில் கட்டண சலுகை மிக அதிகமாக இருப்பதால் வசதி படைத்தவர்கள் மட்டுமே இதனை காண முடியும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கன முதல் அதிக கன மழை வரை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்ணீர் வடிய வழிவகை செய்யப்பட்டது.
இந்த கனமழை காரணமாக அக்டோபர் 15 முதல் 18 வரை கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தறபோது மழை நின்று விட்டதால், கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று முதல் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வழக்கம் போல் செயல்படும். இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க tnhorticulture.in என்ற இணையதளம் வாயிலாக பூங்காவிற்கான நுழைவு கட்டணத்தை பெறலாம் . பறவையகம் மற்றும் ஜிப்லைனிற்கு மாலை 4 மணி வரை மட்டுமே நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.
இசை நீரூற்றை பார்வையிட ஒரு நாளைக்கு 320 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதற்காக நுழைவுச்சீட்டு மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம். மாலை 6 மணி வரை மட்டுமே பொது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}