கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்

Aug 17, 2023,05:01 PM IST
சென்னை:  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காத குடும்ப தலைவிகள் நாளை முதல் மூன்று நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும்  இதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவோம் என்பது.  இந்தத் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் உரையின்போது அறிவிக்கப்பட்டது.

    ‌‌


மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும் என்ற நெறிமுறைகளை அரசு கடந்த ஜூன்  மாதம் வெளியிட்டது. அதன்படி  குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள், ஏற்கனவே முதியோர் தொகை வாங்கும் குடும்பம் ஆகியோர்க்கு மகளிர் உரிமைத் தொகை கிடையாது என்று அறிவிப்பில் வெளியானது.

இதன் அடிப்படையில் தகுதி உடையவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் உரிமத் திட்டகாண படிவத்தை பெற்று விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது நாளை முதல் மூன்று நாட்கள் விண்ணப்பிக்க தகுதியான பயனாளிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்