- கலைவாணி ராமு
அன்று அடுப்பங்கரையை அலங்கரித்தார்கள்,
அதில் சில வீரமங்கைகள் ஆண்டும் வந்தார்கள்!
இன்று அனைத்துத் துறைகளிலும் தங்களை
இணைத்துக்கொண்டு, நிரூபித்தும் காட்டுகிறார்கள்!
அன்பு காட்டுவதில் அன்னிபெசன்ட் அம்மையாராய்,
அனைவரையும் அரவணைப்பதில் அன்னை தெரசாவாய்,
பாரதத்தை ஆள்வதில் இந்திரா காந்தியாய்,
ஈடில்லாப் புகழ் சூடுவதில் கஸ்தூரிபாய் காந்தியாய்,
உள்ளம் நிறைந்த விண்மீன் கல்பனா சாவ்லாவாய்,
ஊர் போற்றும் படி வாழ்ந்த ராணி மங்கம்மாளாய்,

உயர்வான எண்ணம் கொண்ட சரோஜினி நாயுடுவாய்,
ஏற்றமிகு வாழ்க்கை வாழ்ந்த எலிசபெத் ராணியாய்,
ஐம்புலன் அடக்கி ஆளும் கமலா நேருவாய்,
ஒற்றுமைக்கு வித்திட்ட பாத்திமா பீவியாய்,
ஓயாமல் உழைப்பதில் தீரம் மிக்க கிரண் பேடியாய்,
வையகம் போற்றிப் புகழும் ஔவையாரைப் போல,
ஆளப்பிறந்தவர்களாய் நாமும் வாழ்ந்து காட்டுவோம்!
நம்முடன் வாழும் கலியுகப் பெண்ணான ரத்தினம்மா போல்,
அனைத்துப் பெண்களின் விடிவெள்ளியாய் ஒளி வீசுவோம்!
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}