சென்னை: கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் முதல்நாள் வசூல் உலகளவில் 180 கோடி என்று தெரிய வந்துள்ளது. லியோ, ஜவான் படத்தின் முதல் நாள் வசூலையும் இப்படம் முந்தியள்ளது.
பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், ஷோபனா, தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. மகாபாரத கதையை அறிவியல் தொழில்நுட்பத்துடன், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு கற்பனைகளைக் கலந்து அசாத்திய கற்பனையால் உருவாக்கி ரசிகர்களை மிரட்டலான அனுபவத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். இது ரசிகர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை எனலாம்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், அதில் இந்தியாவில் மட்டும் 95 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கல்கி 2898 ஏடி திரைப்படம் கேஜிப் 2, சலார், ஜவான் ஆகிய திரைப்படங்களின் வசூலை முந்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஜிஎப் 2 முதல் நாளில் ரூ. 159 கோடியும், சலார் முதல் நாளில் ரூ.158 கோடியும், லியோ முதல் நாளில் ரூ.142 கோடியும், ஜவான் முதல் நாளில் ரூ.129 கோடியும் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் கல்கி 2898 ஏடி முதல் நாள் வசூலாக ரூ.180 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாள் வசூலில் 223 கோடி பெற்று முதலிடத்திலும், பாகுபலி 2 திரைப்படம் ரூ.217 கோடி பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}