சென்னை: கலைஞானி என்றும் உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்று அன்போடு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது 71வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தலைவர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
கமல்ஹாசன், இந்தியா சினிமாவின் முகமாக திகழ்பவர். புதுமை நாயகன். அவர் பதித்துச் சென்ற தடம் முழுக்க தனித்துவம் வாய்ந்தது. இவரைப் போல ரிஸ்க் எடுத்த நடிகர் ஒருவரை அவருக்கு முன்பும் சரி, அவருக்குப் பின்பும் சரி இந்திய சினிமா கண்டதில்லை. இவரால் சினிமாவுக்குப் பெருமையா அல்லது சினிமாவால் இவருக்குப் பெருமையா என்ற வாதத்திற்கு இன்று வரை பதில் இல்லை.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய இவரது பயணம் இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக, பாடலாசிரியராக, பாடகராக, நடனக் கலைஞராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக என்று இவர் எடுக்காத அவதாரம் இல்லை.

இந்த அவதார நடிப்புக் கலைஞனுக்கு கலையுலகைத் தாண்டி அரசியல் முகவரியும் உள்ளது. அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களிடையே மிகப் பெரிய அறிமுகத்தைப் பெற்றது. ஆனால் சினிமாவில் நடித்தது போல அரசியலில் நடிக்கத் தெரியாத காரணத்தால் அரசியல் என்ற களத்தில் அந்த நாயகன் சற்றே பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் வீழவில்லை.. எம்.பியாக புது முகம் பூண்டு புத்தெழுச்சியுடன் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தொட்ட இடத்தில் எல்லாம் எதையும் விட்டு வைத்ததில்லை என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம்.. பிக் பாஸ். அந்த நிகழ்ச்சியை அவருக்குப் பின் நடத்தி யாருக்குமே கமல் அளவுக்கு பெருமை கிடைக்கவில்லை என்பதே கமல்ஹாசனின் வீச்சைப் புரிந்து கொள்ள உதவும்.
அப்படிப்பட்ட கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி திரைக் கலைஞர்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள்!
நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!
அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?
கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
{{comments.comment}}