சென்னை: என்னை முழு நேர அரசியல்வாதி இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். நான் சொந்தக் காசைப் போட்டு கட்சி நடத்தி வருகிறேன். நமது நாட்டில் 40 சதவீதம் பேர் ஓட்டுப் போடுவதே இல்லை. அவர்கள் முழு நேர குடிமகன்களே கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு விழாவையொட்டி இன்று சென்னை கட்சி தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும்போது கூறியதாவது:
முழு நேரம் என்று எதுவும் இல்லை
ஏன் முழு நேர அரசியல் செய்வதில்லை என்று பலர் கேட்கிறார்கள். எனது கட்சிக்காரர்களே கூட கேட்கிறார்கள். நமது நாட்டில் முழு நேர அரசியல்வாதி என்று யாருமே இல்லை. ஒருவரும் கிடையாது. முழு நேர அப்பனும் கிடையாது, முழு நேர கணவரும் கிடையாது.. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம். எதுவுமே முழு நேரம் கிடையாது.
எனக்கு இத்தனை வருடமாக எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறீக்ள். நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். உங்களது அன்புக்கு கைமாறு இன்னும் செய்யவில்லை என்பதால்தான் வந்தேன். நீங்கள் கொடுத்த அன்பு அப்படியே பாக்கி உள்ளது. அதற்கு வட்டி கூட கொடுக்கலை. அதற்காகத்தான் வந்துள்ளேன்.
எல்லாமே என் சொந்தக் காசு
முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்று சொல்வோருக்கு, இந்தக் கட்சி இந்த விழா இதற்குப் பின் நடைபெறப் போகும் சிற்றுண்டி.. எல்லாமே நான் சம்பாதித்த காசிலிருந்து செய்கிறேன். என்ன திமிராகப் பேசுகிறாரே என்று கேட்கலாம்.. இந்தத் திமிர் எல்லாம் பெரியாரிடமிருந்து வந்தது. அவரிடம் கேட்டால் அவர் அப்படித்தான் சொல்வார்.. இது என் காசு.. என்று சொன்னவர் பெரியார். இதையேதான் எனது கட்சிக்காரர்களும் சொல்ல வேண்டும்.
ஒரு வேட்பாளர் 95 லட்சம் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. அப்படித்தான் செலவு பண்றாங்களா.. யாராவது சொல்லச் சொல்லுங்க.. கோவை தெற்குத் தொகுதியையும் சேர்த்துதான் கேட்கிறேன். இந்தியாவில் 40 சதவீதம் பேர் ஓட்டுப் போடுவதில்லை. அவர்கள் போட்டாலே எல்லாம் சரியாகி விடும். அவர்கள் முழு நேர குடிமகன்களாகக் கூட இல்லை. இப்படி இருக்கும் வரை ஒரு நேர்மையானவரும் தேர்தலில் ஜெயிக்க முடியாது.
என்னைப் போக வைப்பது ரொம்பக் கஷ்டம்
என்னை அரசியலுக்கு வர வைப்பது கஷ்டம் என்றார்கள்.. என்னை போக வைப்பது அதை விட கஷ்டம்.. சும்மா சொல்லவில்லை.. எனது எஞ்சிய வாழ்நாள் உங்களுக்குக் கொடுப்பதற்காக. இனி எல்லாம் உங்களுடையதுதான். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வெளியில் வாங்க. என்னிடம் செலவு செய்ய எதுவும் இல்லை.
என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடை போட்டுக் கொண்டே இருப்பேன். இங்கு வியாபாரம் வர்த்தகம் கிடையாது. இந்த அரசியல் இப்படித்தான்.. இங்கு எதுவும் தேறாதா என்றால், தேறும், எதிர்காலத் தலைமுறைக்குத் தேறும். எதிர்பார்ப்புடன் இங்கு வராதீர்கள்.. அப்படி வந்தால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றார் கமல்ஹாசன்.
நல்ல செய்தி லேட்டாதான் வரும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூட்டணி தொடர்பாக கேட்டபோது, கெட்ட செய்திதான் வேகமாக வரும். நல்ல செய்தி மெதுவாகத்தான் வரும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவரது பாணியில் அவர் செய்வார். எனது பாணியில் நான் செய்வேன். நான் அவரிடம் ஏற்கனவே பேசியுள்ளேன்.
இந்த 7 ஆண்டு காலத்தில் எதைச் செய்யக் கூடாது என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். எதை எப்படிச் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}