வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தந்தை, டொனால்ட் ஹாரிஸ், தனது மகளுடன் பேசுவது இல்லையாம். மகளைப் பார்ப்பதற்காக இதுவரை வெள்ளை மாளிகை பக்கமே அவர் போனதில்லையாம். இத்தனைக்கும் வெள்ளை மாளிகைக்கு அருகே கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்தான் அவர் வசிக்கிறாராம்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் தமிழ்நாட்டைப் பூர்வீமாகக் கொண்டவர். அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். கருப்பர் இனத்தவரான டொனால்ட் ஹாரிஸும், ஷியாமாளவும் படிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கமலாவுக்கு 7 வயதாக இருந்தபோது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
டொனால்ட் ஹாரிஸ், மார்க்சிஸம் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர். கமலா ஹாரிஸின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு கிடையாதாம். இதனால் மகளுடன் அவர் சரிவர பேசுவது இல்லையாம் ஒரு தூரத்தை கடைப்பிடித்து வருகிறாராம். கமலாஹாரிஸ் துணை அதிபரானது முதல் இதுவரை ஒருமுறை கூட அவர் வெள்ளை மாளிகைக்கு போய் அவரை பார்த்தது கிடையாதாம். இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையிலும் கூட கமலாவை அவர் இதுவரை பார்க்கவில்லை, பேசவில்லை என்று சொல்கிறார்கள்.
86 வயதாகும் டொனால்ட் ஹாரிஸ், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். ஜனநாயகக் கட்சி மாநாட்டுக்கும் கூட அவர் வரவில்லை. அதேசமயம், அந்த மாநாட்டில் கமலா பேசும்போது, அச்சமின்றி இருக்க வேண்டும், துணிவுடன் இருக்க வேண்டும் என்று தனது தந்தை தனக்கு அட்வைஸ் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டார் கமலா ஹாரிஸ்.
ஜனநாயகக் கட்சி மாநாட்டின்போது கமலா ஹாரிஸின் கணவர் டக்ளஸ் எம்ஹாப், அவரது முன்னாள் மனைவி, வளர்ப்புக் குழந்தைகள் என எல்லோருமே வந்திருந்தனர். ஆனால் தந்தை மட்டும்தான் வரவில்லை. கமலாவின் தாயார் ஏற்கனவே இறந்து விட்டார்.
ஷியாமளா கோபாலன் - டொனால்ட் ஹாரிஸ் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் தான் கமலா ஹாரிஸ், இளையவர் மாயா. கமலாவை விட மாயா 3 வயது இளையவர் ஆவார்.
இப்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ள பெரிய கேள்வி - கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது பதவியேற்பு விழாவுக்கு டொனால்ட் ஹாரிஸ் வருவாரா மாட்டாரா என்பதுதான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!
பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!
Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!
ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!
செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்
{{comments.comment}}