சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பியாக பதவியேற்கவுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றும் ஒரு அரிய வாய்ப்பை அவர் உருவாக்கியுள்ளார். அதாவது கமல்ஹாசனின் அலுவலகத்தில் ஆய்வு இன்டன்ஷிப்புக்கு ஆட்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். அவரது அடுத்த கட்ட அரசியல் டெல்லியில் முகாமிடவுள்ளது. தமிழ்நாட்டில் புயலைக் கிளப்பியது போல நாடாளுமன்றத்திலும் அவர் அனலைப் பரப்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தனது அரசியல் செயல்பாடுகள், நாடாளுமன்ற செயல்பாடுகளை சிறப்பாக திட்டமிட கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதனால் தனக்குத் தேவையான புள்ளிவிவரங்கள், தரவுகள் உள்ளிட்டவற்றைத் திரட்டவும் தனக்கு தேவையான உதவிகளைப் பெறவும் அவர் இன்டர்ன்ஷிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி, சென்னையில் இதற்காக தனித் தனி டீம்களை அவர் உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவினருடன் இணைந்து இன்டன்ஷிப்புக்கு தேர்வாகும் இளைஞர் பட்டாளம் செயல்படும்.
இதற்காக பொதுக் கொள்கை வகுப்பு, ஆட்சிமுறை, நாடாளுமன்ற பணிகள் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு கமல்ஹாசனின் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பயிற்சியானது ஊதியத்துடன் கூடியது. 2 முதல் 6 மாத காலம் பயிற்சி இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சட்டம், இதழியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் கூட விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி மொழியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூகுள் பார்மில் போய் விண்ணப்பிக்கலாம்: https://lnkd.in/gVrfUcdy
மகா மோசமாக இருக்கும் மதுரை.. மறு சீரமைப்பு நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை
ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்
42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கொடூரனை கைது செய்யாதது தான் அரசின் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு !
கிங் படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு காயம்.. ஒரு மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை!
கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}