சென்னை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இக்கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வந்தது. இந்த நிலையில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது மக்கள் நீதி மய்யம். இருப்பினும் தேர்தலில் அது போட்டியிடவில்லை. மாறாக ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு சீட் கொடுத்துள்ளது திமுக.
தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக கூட்டணியும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து மீண்டும் சினிமா பக்கம் திரும்பினார் கமல்ஹாசன். அவர் நடித்த இந்தியன் 2 வெளியானது. தொடர்ந்து தக்லைப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். அதுவும் தற்போது முடிந்து விட்டது. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மக்கள் நீதி மய்ய கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கட்சி உட்கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் நடந்த இக்கூட்டத்தில், 1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவராக கமலஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கண்டித்தும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கையைக் கண்டித்தும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்னர் கமல்ஹாசன் கூட்டத்தில் பேசும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை உலகம் பல நாடுகளில் ஏற்கனவே பார்த்து விட்டது. அதன் பாதகத்தையும் அனுபவித்து விட்டது. அது அபாயகரமான சிந்தனை. சர்வாதிகாரத்திற்கே வழி வகுக்கும் என்றார் கமல்ஹாசன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}