ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொன்ற 2 ரவுடிகள்.. இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

Dec 27, 2023,11:19 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று ரவுடி பிரபா என்பவரை ஓட ஓட வெட்டிக் கொன்ற 2 ரவுடிகள் இன்று அதிகாலை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவன் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன். அப்பகுதியில் ஹிஸ்டரி ஷீட்டராக வலம் வந்த ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்திருந்த பிரபாகரனை நேற்று ஒரு கும்பல் காரில் வந்து மடக்கியது. அவர்களில் இருவர் காரை விட்டு இறங்கி பிரபாவை வெட்ட ஆரம்பித்தனர். இதனால் பிரபா உயிர் தப்ப ஓடினார். அவர்கள் விடவில்லை. துரத்திப் பிடித்து மடக்கி சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பி விட்டனர்.




பட்டப்பகலில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதிகாலையில் நடந்த என்கவுண்டர்


இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். பிரபாகரன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். 



புதிய ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் சர்வீஸ் சாலையில் பதுங்கி இருந்த ரவுடிகளை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டனர். அப்போது, ரவுடிகள் காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ரவுடிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரவுடிகள் ரகுரவன், கருப்பு அசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிலர் தப்பி ஓடி விட்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் 7 பேரை தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தை டிஐஜி பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் டிஐஜி பொன்னி நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.


காஞ்சிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஹிஸ்டரி ஷீட்டர்கள் இருப்பதாக கூறிய டிஐஜி பொன்னி, ரவுடி பிரபா கொலை வழக்கில் மேலும் 2 பேரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு

news

தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

news

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!

news

எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு

news

அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!

news

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்

news

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்‌‌..!

news

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே

news

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்