சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தில் தொகுப்பாளராக (எடிட்டர்) பணிபுரிந்த நிஷாத் யூசுப் மர்மமான முறையில் இன்று உயிரிழந்துள்ளார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா .இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக தயாராகியுள்ளது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படம் வெளிவர இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது பட புரமோஷன் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் இன்று உயிரிழந்துள்ளார். 43 வயதான இவர் இன்று காலையில் கொச்சி அருகே பணம்பள்ளியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நிஷாத் யூசுப் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிஷாத், இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கங்குவா படம் வெளியாகும் முன்பே எடிட்டர் நிஷாத் யூசுப் மரணம் நடந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நிஷாத், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி நடித்து வரும் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு தள்ளுமலா என்ற படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டர் விருதினை பெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}