சென்னை: ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் கமிட்டானார். இப்படம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு செட்டுகளிலும் 3d எஃபக்ட்டுடன் படமாக்கப்பட்டு வந்தது. தமிழில் முதன் முதலாக பெரும் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது இந்த கங்குவா திரைப்படம்.
இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் வலம் வரும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது. இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா மிரட்டலாக நடித்திருக்கிறார். ஜோடியாக திஷா பட்டானி நடித்துள்ளார். மேலும் இந்திய நடிகர்கள் இதுவரை கண்டிராத புது விதமான திரைக்கதை, பிரம்மாண்டம் என இப்படத்தில் பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. அதேபோல் பாலிவுட் ஆக்டர் பாபி தியோல் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் பிரம்மாண்டம் குறித்தும், படத்தின் கதை களம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேன்மேலும் எகிற வைத்து வந்தது. இதற்கிடையே கங்குவா திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அப்போது வேட்டையான் குறுக்கே புகுந்ததால் பட வெளியீட்டை நவம்பர் 14ஆம் தேதி தள்ளி வைத்து இன்று படம் வெளியானது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் இன்று கங்குவா திரைப்படம் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என அனைத்து மொழிகளிலும் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே கங்குவா வெளியானது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு படம் வெளியானது. சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இன்று தான் கங்குவா திரைப்படம் வெளியாகி இருப்பதால், முதல் காட்சியை பார்ப்பதற்கு தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் திரண்டு, படத்தை கொண்டாடி தங்களின் பேராதரவை அளித்து வருகின்றனர்.
சென்னையில் காசி திரையரங்கு முன்பு சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அங்கு வைக்கப்பட்ட பேனர்களுக்கு ராட்சத மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து, மேளம் தாளம் முழங்க வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அதே சமயத்தில் ரசிகர்களோடு இணைந்து கங்குவா திரைப்படத்தை கண்டு ரசிப்பதற்காக இயக்குனர் சிறுத்தை சிவாவும் படக்குழுவினரும் இந்த திரையரங்கத்திற்கு வந்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}