"இந்தாங்க வளையல்.. ஒய்புக்குப் போடுங்க".. எம்.பிக்களுக்கு வாங்கிக் கொடுத்த கனிமொழி!!

Aug 31, 2023,09:44 AM IST

மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திமுக எம்பி கனிமொழியும் ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அடுத்தடுத்து வந்ததால் கோவிலில் பரபரப்பு நிலவியது.


ஆனால் இருவரது வருகையும் வேறு வேறு நோக்கத்தில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி சாமி கும்பிட வந்தார். கனிமொழியோ, சாமி கும்பிட வந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுடன் வந்திருந்தார்.




ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் தலைவராக திமுக எம்பி கனிமொழி உள்ளார் இவரின் தலைமையில் 11 எம்பிக்கள் குழு நேற்று மதுரை  வந்தனர். சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள எம்பி கனிமொழியின் தலைமையில் 11எம்பிக்களும் வந்திருந்தனர். 


வந்திருந்த எம்பிக்கள் குழந்தைகளுக்கு அன்போடு உணவு பரிமாறினர். கனிமொழியும், பிற எம்பிக்களுக்கும்  கூட இந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர். காலை உணவுத் திட்டம் நன்றாக இருப்பதாகவும், முதல்வருக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவிக்குமாறும் கனிமொழியிடம் எம்பிக்கள் கூறினார்கள். 


குழந்தைகள் கல்வியில் மட்டுமல்லாமல் உடல் நலத்திலும் தமிழ்நாடு அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என எம்பி ஷியாம் சிங் பாராட்டினார். பின்னர் குழுவினர் நெல்பேட்டையில் உள்ள சமையல் கூடத்தையும் ஆய்வு செய்தனர்.




இவ்வளவு தூரம் வந்தாச்சு.. மீனாட்சியை தரிசிக்காமல் போக முடியுமா.. எனவே எம்.பிக்கள் குழு அப்படியே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வண்டியைத் திருப்பியது. அனைத்து எம்.பிக்களும் பக்திப் பரவசத்துடன் அம்மனை தரிசித்தனர். கோவிலையும் சுற்றிப் பார்த்தனர். அவர்களுக்கு கனிமொழி கோவில் குறித்து விளக்கினார். 


பின்னர் அங்கிருந்த வளையல் கடைக்கு எம்.பிக்கள் சென்றனர். கனிமொழி கடைக்காரர்களிடம் பேசி வளையல்களை வாங்கினார்.  பெண் எம்.பி கீதா பொன்வாவுக்கு வாங்கிக் கொடுத்தார். கூடவே பிற ஆண் எம்.பிக்களிடமும் வளையல்களை வாங்கிக் கொடுத்து உங்களது மனைவிகளுக்குப் போடுங்க என்று பாசத்தோடு கூறினார். அவர்களும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டனர்.


எடப்பாடி பழனிச்சாமியும் வருகை




இதேபோல, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று காலை சாமி தரிசனம் செய்ய மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார் . முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர் .பி .உதயகுமார்,  ராஜன் செல்லப்பா ,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி .வி ராஜ்சத்தியன் உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.


ஆகஸ்ட் 20 அன்று மதுரையில் நடைபெற்ற எழுச்சி மாநாடு சிறப்பாக நடந்ததை அடுத்து மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் கொடுத்து மரியாதை செலுத்தினர்.


அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள திமுக எம்பி கனிமொழி மற்றும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் ஒரே நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்ததால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. 

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்