எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

Dec 06, 2025,05:05 PM IST
சென்னை: எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என்று  திமுக எம்பி கனிமொழி,  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை. ராமர் ஆட்சி பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி ராமர் ஆட்சி போல வர வேண்டும் என்று கூறியிருந்தார்.





இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து,  மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் பேலவா?

கவலை வேண்டாம். அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்