உன்னைத் தேடி ஒரு பயணம்..
நீ எங்கே?
வானம் நீலம்
உன்னைக் காணத் தொடங்கும்
என் பயணமும் நீளம்
கண்களில் தேடல், கால்கள் பயணம்.
புல்லின் மென்மை, பறவையின் கீதம்,
எங்கே நீ?
தேடும் என் மனம்
உள்ளுக்குள் கூடவே
வாடாத உன் மணம்.
நகரம் கடந்து, நதியைக் கடந்து,
மலைகள் ஏறி, பள்ளத்தாக்கு இறங்கி.
ஒவ்வொரு அடியிலும் உன் நினைவுகள்,
உன்னைத் தேடும் என் பிதற்றல்கள்
உனக்கு மட்டும் புரியும் பாஷையில்.
தென்றல் வந்து கன்னம் தொட்டால்,
நீதானோ என்று திரும்பிப் பார்க்கிறேன்.
மலரின் வாசம் மூக்கைத் தொட்டால்,
நீதானோ என்று நுகர்ந்து பார்க்கிறேன்
தொட்டும் பார்த்தும்
எட்டிய தூரத்தில்
நீ கிட்டாமல்
துவண்டும் போகிறேன்.
உன் சிரிப்பின் ஒலி கேட்குமோ என்று,
காற்றின் சலசலப்பைக் கூர்ந்து கேட்கிறேன்.
உன் பாதங்களின் தடம் காணுமோ என்று,
மண்ணில் விழுந்த இலைகளைத் தேடுகிறேன்
உன் அரவம் மட்டுமே என் காதுகளில்
நீதான் எங்கும் இல்லை.
சாலையின் ஓரம், சாமந்திச் செடிகள்,
அதில் பூத்த பூக்கள் உன்னைப் போலுமே.
உன் கூந்தல் வாசம் அதில் இருக்குமோ?
பறந்து போன பட்டாம்பூச்சி நீதானோ?
தவித்துப் பார்க்கிறேன்
காணாமல் திகைத்துப் போகிறேன்
மழைத்துளி விழும் வேளையில்,
உன் கண்ணீர் துளிபோல தோன்றுகிறது.
வானவில் தோன்றும் வேளையில்,
உன் புன்னகைபோல் தெரிகிறது
தாத்தா செடியைப் பார்க்கையில்
உன் மூக்குத்தி பளிச்சிடுகிறது.
நிலவு வந்து என் முகம் பார்த்தால்,
உன் முகம் ஏன் நினைவுக்கு வருகிறது?
நட்சத்திரங்கள் என்னைப் பார்த்துச் சிரித்தால்,
உன் கண்களின் சிரிப்பு தெரிகிறது.
காடு கடந்து, கடற்கரை வந்து,
அலைகள் வந்து என் காலைத் தொடும்.
அதில் உன் ஸ்பரிசம் இருக்குமோ?
அலைகள் சொல்லும் உன் ரகசியம்.
நீ ஒரு பூ
என் இதயத்தின் தோட்டத்தில் பூத்த, உன் இதழ்கள்
என் நினைவுகளின் வண்ணங்களாக மாற,
உன் வாசம் என் மூச்சுக்காற்றின் இசையாகிறது.
நான் ஒரு தேனீ, உன் அன்பின் தேனைத் தேடி,
உன்னைச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்.
உன் ஸ்பரிசம், என் ஆன்மாவை நிறைக்கிறது,
உன் பார்வை, என் இருளை விரட்டுகிறது.
உன் மெல்லிய இதழ்களைப் போல, என் இதயம் பூக்கிறது,
உன் சிரிப்பு என் சோகத்தின் முள்ளை நீக்குகிறது.
நீ அருகில் இல்லாதபோது, நான் வாடிப்போகிறேன்,
உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்,
என் தோட்டத்தின் ராணியே!
என் நேசம் உனக்காக மட்டுமே.
உன்னைக் கண்ட நொடியிலிருந்து,
என் உலகத்தின் அத்தனை அழகையும் நான் உணர்கிறேன்.
நீயே என் கவிதை, நீயே என் பாடல்.
என் தேடல் முடியாது, என் பயணம் ஓயாது,
இப்போதுதானே தொடங்கியிருக்கிறேன்
உன்னைக் காணும் வரை, என் நேசமும் அழியாது.
என் பாதை நீதானே, என் பயணம் உன்னிடமே,
எங்கே நீ எங்கே
உன்னைத் தேடி வருகிறேன்.
ஆமாம்!
எங்கு சந்தித்தன
நம் இதயங்கள் முதன் முதலில்?
(பயணங்கள் முடிவதில்லை)
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்: அச்சத்தில் சுற்றுலா பயணிகள்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?
வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?
{{comments.comment}}