"செய்திகள் வாசிப்பது செளந்தர்யா".. அடடே.. இது நிஜ நியூஸ் ரீடர் இல்லப்பா!

Jul 19, 2023,01:50 PM IST

பெங்களூரு: கன்னடத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகத்து பவர் டிவியின் "செளந்தர்யா". கன்னட டிவி சானலான பவர் டிவியின் முதல் ரோபோட் ஆங்கர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செளந்தர்யா. 


எல்லாத் துறையிலும் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுந்து விளையாடத் தொடங்கி விட்டது. எது நிஜம், எது நிழல் என்றே தெரியாத அளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் அனைவரின் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.




வட இந்தியாவில் நியூஸ் சானல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடர்களை அவர்கள்  பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அது தற்போது தென்னிந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.


கன்னடத்தில் வெளியாகும் பவர் டிவியில் செளந்தர்யா என்ற  செயற்கை நுண்ணறிவு நியூஸ் ரீடரை அறிமுகப்படுத்தியுள்ளனர். அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு நியூஸ் சானல்கள் பலவற்றில் இதே போல ஏற்கனவே முயற்சிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


செளந்தர்யாவுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இன்னொரு கன்னட நியூஸ் சானலில் மாயா என்ற செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.


தமிழில் இது எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆனால் சீக்கிரமே வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஒரு காலத்தில் ஷோபனா ரவியின் அழகான தமிழ் உச்சரிப்பை பார்த்து மெய் மறந்து போயிருந்தோம���.. செய்தி வாசிப்பை கேட்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. மீண்டும் அதேபோன்ற காலத்தை இந்த செயற்கை நுண்ணறிவு தருமா..  காத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்