சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருகி வருகிறது. நகரமயமாக்கலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அரசு உருவாக்கி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வருகிறார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் மாதம் அவர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாா நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தபோது கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணை வந்து விட்டது.
இவை மட்டுமல்லாமல், கவுந்தம்பாடி, அரூர், சூலூர், மோகனூர், நார வாரி குப்பம், வேப்பம்பட்டு ஆகிய நகராட்சிகளும் விரைவில் உருவாக்கப்படவுள்ளன. ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் எல்லைகள் விரிவாக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
மூவேந்தர் வீரமும் முண்டாசு கவிக்குள்!
முண்டாசுக் கவிஞன் "பாரதிக்கு" கவிதாஞ்சலி!
இரைதேடும் பறவைகள்!
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}