பெங்களூரு: கர்நாடக அரசியலில் மீண்டும் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் சித்தராமையா. ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது பதவி விலகல் கடிதத்தை அவர் வழங்கினார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு இடையே அதிகாரப் பகிர்வு தொடர்பாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம்.
ஆனால், இன்று (மே 28, 2026) நடைபெற்ற இந்த சந்திப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை உணர்த்துகிறது. சந்திப்பின் போது, முதல்வர் சித்தராமையாவை டி.கே.சிவகுமார் மிகுந்த மரியாதையுடன் கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, அவரது காலில் விழுந்து வணங்கி நெகிழ்ச்சியுடன் ஆசி பெற்றார். சித்தராமையாவும் புன்னகையுடன் அவரது தோளைத் தொட்டு மனதார வாழ்த்தினார்.
முதல்வர் நாற்காலி மாறுகிது

இந்தத் திடீர் சந்திப்புக்கு பின்னால் ஒரு முக்கிய அரசியல் நகர்வு இருப்பதாகத் தகவல்கள் கசிந்தன. முதல்வர் பதவியை சித்தராமைய்யா ராஜினாமா செய்ய உள்ளதாகவும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவகுமார் விரைவில் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் மிக வேகமாக பரவியது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியின் போதே, ஆட்சிப் பொறுப்பை இரு தலைவர்களும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என்ற ரகசிய உடன்படிக்கை எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, தற்போது சுமுகமான முறையில் அதிகார மாற்றம் நடைபெறவிருப்பதாகவும், அதற்கு முன்னதாக மூத்த தலைவரான சித்தராமையாவைச் சந்தித்து டி.கே.சிவகுமார் வாழ்த்துப் பெற்றதாகவும் கூறப்பட்டது.
அதற்கேற்ப தற்போது சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். சனிக்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.,ஆகிறாரா சித்தராமைய்யா?
பீகாரில் நிதிஷ்குமார் செய்தது போல் சித்தராமைய்யாவும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, எம்.பி.,யாக பொறுப்பேற்று, தேசிய அரசியலில் நுழைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் சித்தராமைய்யா தரப்பில் அந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தொடர்ந்து அவர் எம்எல்ஏ.,வாக மட்டுமே நீடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}