திருவண்ணாமலை : நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், தமிழகத்தில் உள்ள மோட்ச தலங்களில் முதன்மை தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை திருத்தலம். இறைவன் ஜோதி வடிவமாக காட்சி தந்த தலம் என்பதால் தீப வழிபாடு, லிங்க வழிபாடு ஆகியவை தோன்றிய தலமும் திருவண்ணாமலை ஆகும். இங்கு சிவனே மலையாக காட்சி தருவதால் மலையை வலம் வந்து வழிபடும் கிரிவல வழிபாடும் மிகவும் முக்கியமானதாகும். அதிலும் பெளர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
தங்களின் யார் பெரியர் என விஷ்ணுவிற்கும், பிரம்மனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, அதை தீர்த்து வைப்பதற்காக ஜோதி பிளம்பாக, அடி முடி காண முடியா அண்ணாமலையாராக ஈசன் தோன்றினார். தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்றார் சிவ பெருமான். இதனை ஏற்ற விஷ்ணு, அடியை காணவும், பிரம்மா முடியை காணவும் சென்றனர். இவரும் தங்களின் முயற்சியில் தோல்வி அடைந்தனர். குறுக்கு வழியில் வெற்றி பெற நினைத்த பிரம்மா, தான் ஈசனின் தலை முடியை கண்டு விட்டதாக பொய் சாட்சி சொல்லும் படி தாழம்பூவை அழைத்து வந்தார். அதனால் பிரம்மாவிற்கு கோவிலோ, பூஜையோ இருக்காது என்றும், தாழம்பூ பூஜைக்கு உதவாது எனவும் சாபம் அளித்தார் சிவ பெருமான்.
விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கு ஜோதி வடிவமாக ஈசன் காட்சி அளித்த திருநாளே கார்த்திகை தீபத் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அண்ணாமலையார் கோவிலுக்கு பின்புறம் உள்ள 2667 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதை தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகே திருக்கார்த்திகை அன்று வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது.
இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரூ.70 கோடி செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, நவம்பர் 07ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை விபரம் :
01.12.2024 - அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்
02.12.2024 - அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
03.12.2024 - அருள்மிகு விநாயகர்,சந்திரசேகர் உற்சவம்
04.12.2024 - கொடியேற்றம்-வெள்ளி வாகனம்,சிம்ம வாகனம்
05.12.2024 - தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள்
06.12.2024 - சிம்ம வாகனம், வெள்ளி வாகனம்
07.12.2024 - வெள்ளி காமதேனு வாகனம்
08.12.2024 - வெள்ளி ரிஷப வாகனம்
09.12.2024 - வெள்ளி ரதம்
10.12.2024 - மகா ரதம்
11.12.2024 - பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்
12.12.2024 - கைலாச வாகனம், காமதேனு வாகனம்
13.12.2024 - பரணி தீபம் மற்றும் மகா தீபம்
14.12.2024 - தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்
15.12.2024 - தெப்பல் உற்சவம்-அண்ணாமலை
16.12.2024 - தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்
17.12.2024 - சந்திரசேகர் உற்சவம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?
இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீடு தேதியை அறிவித்த படக்குழு
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
தங்கம் விலை நேற்று மட்டுமில்லங்க இன்றும் குறைவு தான்... அதுவும் சவரன் ரூ. 400 குறைவு!
கேரளாவில் பரவும் மூளையை உண்ணும் அமீபா நோய்.. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 18, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
{{comments.comment}}