கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. பலியான சிறுவனின் தந்தை வழக்கு

Oct 08, 2025,05:06 PM IST

டெல்லி:  நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 


செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்யின் பேரணியின் போது கரூர் அருகே நடந்த இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தற்போது எஸ்ஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 10 அன்று விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதே நாளில்தான் பாஜக தலைவர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த முறையீட்டு மனுவையும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




முன்னதாக, அக்டோபர் 3 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் இந்த சம்பவத்தை விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது. சிபிஐ விசாரணை கோரிக்கைகளை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. கூட்ட நெரிசலுக்கு காரணமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தவெக தலைமை மற்றும் காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. பேரணிக்கு எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக, 27,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.


விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஏழு மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்ததாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை, தனது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை மூலம் மட்டுமே இது சாத்தியம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.


உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமா என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர சிபிஐ விசாரணை அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்