Kalaiarasi Poems: உள்ளம்.. நீ தான் உலகில் ஆழமானவளோ?

Apr 10, 2026,01:04 PM IST

- கவி.கலை


உள்ளம் 


நீ தான் உலகில் ஆழமானவளோ?  

உன் ஆழம் அறியாமல்தான்  

அமுக்கப்படுகிறேனோ?  

நீ தான் பெரிய இரகசியஅறையோ ?  

உன் இரகசியம் அறியாமல்தான் 

அடங்கிப் போகிறேனோ?  

நீ தான் அன்பின் பிறப்பிடமோ ?  

உன் அன்பை அடையாமல்தான்  

அடிமையாகிறேனோ?  

நீ தான் மரணப்படுக்கையின் கல்லறையோ? 

உன் வலிமை அறியாமல் தான் 

புதைக்கப்படுகிறேனோ ? 

உன்னுள் நான்.


--


வறுமை 


 


என்னைத் தொடாமல்  

உயரம் சென்றவர்களும் உண்டு,  

என்னைத் தொட்டு 

இமயம் வென்றவர்களும் உண்டு, 

பணக்காரர்களுக்குப் பக்கத்தில் வராதவன்,  

படைப்பாளிகளுக்குப் பாதை காட்டுபவன், 

சிலருக்கு அடக்கம் தந்து 

ஆக்கம் செய்பவன்!  

என்னால் வாடிய போதும்  

வசந்தமாய் வாழ்வோர் பலர்,  

என்னைத் தாண்டிய போதும்  

வஞ்சனையால் வீழ்வோர் பலர்.  

சாமானியராய் பிறந்தவரையும்  

சாதிக்க மறந்தவரையும்  

சாதிக்கத் தூண்டும் 

சக்திவாய்ந்த வறுமை நான்.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்