கோழிக்கோடு : கேரளாவில் ஜீப் கவிழ்ந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களான 9 பெண்கள் பலியாகி உள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கேரளாவின் வயநாது மாவட்டம் தாளப்புழாவில் உள்ள கன்னோத் மலைப்பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வரும் பணியாளர்கள், வேலை முடித்து ஜீப்பில் வீடு திரும்பி உள்ளனர். இந்த ஜீப் மானந்தவாடி என்று பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஜீப் மொத்தமாக நொறுங்கி உருக்குலைந்து போனது.
மாலை 04.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மானந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிக்கப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான ஜீப்பில் டிரைவர் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
உயிரிழந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ் பெண்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}