வயநாடு: வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அப்பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளை பார்வையிட வர இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி தவித்தனர். இந்த நிலச்சரிவில் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 151 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நிலச்சரிவால் ஏராளமானோர் தனது குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவில் கண்மூடி தூங்கிய நிலையில் இயற்கையும் அதேபோலவே கண்மூடி மண்ணில் புதைத்த அவல நிலையை எண்ணி கண்ணீர் கடலில் தவித்து வருகின்றனர் வயநாடு மக்கள். இதனால் வயநாடு பகுதியே அழுகுரலால் விழி பிதுங்கி இருக்கிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இச்சம்பவத்தை எண்ணி அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கிய பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராடி வருகின்றனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி வயநாட்டில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகையும் வழங்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கேரளா செல்ல இருக்கிறார். அப்பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருவதால் வானிலை நிலவரம் சரியானதும் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கிறார். ஆனால் தற்போது அங்கு சீரான வானிலை நிலவாததால் பிரதமர் எப்போது கேரளா வருகிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான, வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி நேற்று வயநாடு பகுதிகளை பார்வையிட கேரள வருவதாக அறிவித்திருந்தார். ஆனால் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக ராகுல் காந்தியின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. நிலைமை சரியானதும் விரைவில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}