திருநெல்வேலி: திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த லாரியின் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசு மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையோர மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் கேரளாவிலிருந்து பல்வேறு மருத்துவமனை கழிவுகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். இது சமீப காலமாக எல்லைப் பகுதியில் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. தமிழ்நாட்டை குப்பைத் தொட்டி போல கேரளத்தினர் பயன்படுத்தும் செயல் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த அட்டகாசத்தைத் தடுக்க எந்த தீவிரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தினரின் இந்த அடாவடி செயலால், தமிழக எல்லைகளில் வசிக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த கழிவுகளால் அந்தப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. நீர்நிலைகள், நிலம் போன்றவை பாதிக்கப்படுகிறது. குடிநீர் மாசடைகிறது. உடல் ரீதியான ஆரோக்கிய கேடுகளும் பரவும் அபாயமும் உள்ளன.
இந்த நிலையில் கேரள மாநில புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளுக்கு எதிராக சுத்தமல்லி காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது லாரியையும் பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் அதன் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்நிலையில், கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொண்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரளா மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று நெல்லை வந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}