நிவின் பாலி மீதான .. பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கள் பொய்.. கேரளா போலீஸ் அறிவிப்பு

Nov 06, 2024,05:56 PM IST

எர்ணாகுளம்: நிவின் பாலி மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய வழக்கில், அதற்குப் போதிய ஆதாரம் இல்லை. சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக கேரள போலீஸ் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மலையாள சினிமாவில் நிலவி வரும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை கேரள அரசிடமும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை கேரள அரசு வெளியிட்டபோது நாடு முழுவதும் அது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து போலீஸார் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.




இயக்குநர் ரஞ்சித் , நடிகர்கள் முகேஷ், சித்திக் என பல பெயர்கள் அடிபட்டன. இது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியதன் காரணமாக நடிகர் சங்கமான AMMA தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன்  AMMA சங்கமும் கூண்டோடு கலைக்கப்பட்டது. 


இந்த நிலையில்தான் நிவின் பாலி மீது எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், நிவின் பாலி தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, துபாயில் வைத்து  தன்னை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தினார் என  கூறப்பட்டிருந்தது. இதனால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் புகாரின் பேரில்,  நிவின் பாலி மீது கொத்தமங்கலம் போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 


ஆனால் தன் மீதான புகார்கள் பொய்யானவை. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று உறுதிபடக் கூறியிருந்தார் நிவின் பாலி. இந்த நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரித்து வந்த போலீஸார் தற்போது நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் சம்பவம் நடந்ததாக கூறப்படும்  2023ம் ஆண்டு டிசம்பர் 14 ,15 ஆகிய தேதிகளில் நிவின் பாலி துபாயில் இல்லை. அந்த தேதிகளில் கேரளாவில் தான் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.


அவரது பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்ததில் இது தெரிய வந்தது. அவருக்கு எதிரான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நிவின் பாலி மீதான புகார்கள் பொய்யானவை என்று தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நிவின் பாலிக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு நடிகர் நிவின் பாலி நன்றி தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்