கிவி (KIWI) பழத்தில் குவிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. விலையும் ஜாஸ்தி.. பலனும் அதிகம்!

May 22, 2025,03:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆரோக்கியமான பல சத்தான நன்மைகள் உடைய உணவு வகைகளில் கிவி பழத்தை பற்றிய அருமையான தகவல்கள் பார்ப்போம். அனைத்து காலங்களிலும் கிடைக்கும் வெளிநாட்டு பழம் இது. சிறிது விலை அதிகமாக இருந்தாலும் உடலுக்கு அதிக நன்மை தரும் பழம் கிவி.


பயிர் செய்யப்படும் காலம் - இடம்:


ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிவி பழம் உற்பத்தி ஆகும் இடம் நியூசிலாந்து. அதேபோல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பயிர் செய்யப்படும் இடம் கலிபோர்னியா ஆகும். இன்றைய நாட்களில் அனைத்து பழமுதிர் நிலையங்களிலும் மார்க்கெட்டுகளிலும் கிவி பழம் கிடைக்கிறது.




கிவி பழம் சுமார் 50 விதமான வகைகளில் கிடைக்கிறது. இந்தப் பழம் உண்பதால் செரிமான ஆரோக்கியமும் ,இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. இப்பழத்தை உணவுக்குப் பிறகு உட்கொண்டு வர நல்ல செரிமானம் நடைபெறும். ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இதில் இருக்கிறது.


இது சப்போட்டா பழ நிறத்தில் அதாவது, பழுப்பு நிறத்தில் தோல் இருக்கும். தோல் மீது கம்பளி போன்ற அமைப்பும் ,இனிப்பும், புளிப்பும் சுவை நிறைந்த பழம் கிவி.


கிவி பழத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போமா


கிவி பழத்தில் வைட்டமின்  சி, ஏ, பி 6, பி12 ,பொட்டாசியம், கால்சியம் ,இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. கண்பார்வை மேம்படும். வைட்டமின் ஏ மற்றும் பிற சத்துக்கள் கிவி பழத்தில் நிறைந்துள்ளதால், கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன.


ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ள கிவி பழம் புற்றுநோய் தடுப்புக்கு பெரிதும் பயன்படுகிறது. கிவி பழம் உட்கொள்வதினால் மன அழுத்தம்  குறைகிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. செரிமானம் மேம்படுகிறது.


நரம்பு கோளாறுகளை குணப்படுத்துகிறது திருமணமானவர்களுக்கு குழந்தை உருவாவதில் தாமதமானால் கருவுறுதலை மேம்படுத்த கிவி பழம் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.


டயாபடீஸ் உள்ளவர்களுக்கு கிவி பழம் உட்கொள்வதனால் இது மிதமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கிவி பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சருமத்தை ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கொலாஜின் தொகுப்பை ஊக்குவிக்கின்றன . எனவே தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


இதனை தோல் நீக்கி அப்படியே சாப்பிடலாம். பிறகு ஜூஸ் செய்து பருகலாம் அல்லது ஸ்மூதி செய்து பருகலாம். சாலடுகளில் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான அதிக சத்தான பழம் இது.


குழந்தைகள் முதல் பெரியவர் வரை கிவி பழம் உட்கொண்டு நல்ல பலன் அடையுங்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்