பொண்ணாட கிளாஸ்மேட்டையே காதலித்து கணவராக்கிய பிரிஜிட்.. இமானுவேல் மேக்ரானின் கதை!

May 27, 2025,04:47 PM IST

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் பளார் விட்டார் அவரது மனைவி பிரிஜிட் என்ற செய்திதான் தற்போது பரபரப்பாகி கொண்டுள்ளது. சர்ச்சையில் சிக்குவது பிரிஜிட்டுக்குப் புதிதில்லை. சர்ச்சைகளுடன் வாழ்வது மேக்ரானுக்கும் பழகிய ஒன்றுதான்.


இமானுவேல் மேக்ரான் - பிரிஜிட் திருமண வாழ்க்கையே சர்ச்சையில் பிறந்ததுதான். அப்போது பிரிஜிட்டுக்கு 39 வயது இருக்கும் அவர் அமீன்ஸ் நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஆசிரியையாக இருந்து வந்தார். அவரது வகுப்பில் படித்து வந்த மாணவர்தான் மேக்ரான். அப்போது அவருக்கு வயது 15. இருவருக்கும் அப்போதே காதல் மலர்ந்தது. இதே வகுப்பில்தான் பிரிஜிட்டின் மகளும் படித்து வந்துள்ளா்.


அதாவது மகளுடைய கிளாஸ்மேட்டைத்தான் பிரிஜிட் காதலித்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தன்னை விட 24 வயது இளையவரான மேக்ரானைத் திருமணம் செய்து கொண்ட பிரிஜிட் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வந்தார்.  பிரிஜிட்டுக்கு முதல் திருமணம் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகள்தான், மேக்ரானின் கிளாஸ்மேட் ஆவார். 




முதல் கணவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் மேக்ரானுடன் காதல் கொண்டார். இருவரும் சேர்ந்து ஒரு முறை சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தபோது அதை பிரிஜிட்டின் முதல் கணவரான ஆஸியர் பார்த்து விட்டார். அதன் பிறகு பிரிஜிட்டும், ஆஸியரும் விவாகரத்து செய்து விட்டனர்.


மேக்ரான் எப்போதுமே தன்னை விட வயது அதிகமானவர்களுடன்தான் நெருக்கமாக பழகுவார் பேசுவாராம். இதுகுறித்து அவரது ஆசிரியரான டேணியல் லிலேயு கூறுகையில் 15 வயது என்றாலும் கூட 25 வயதுக்காரரின் பக்குவத்துடன் இருப்பார் மேக்ரான். சக மாணவர்களை விட ஆசிரியர்கள், ஆசிரியைகளுடன்தான் அவர் அதிகமாக பேசுவார். நேரம் செலவழிப்பார். நிறைய விவாதிப்பார் என்றார்.


2007ம் ஆண்டுதான் பிரிஜிட் - மேக்ரான் திருமணம் நடந்தது. 2014ம் ஆண்டு மேக்ரான் நிதியமைச்சராக பதவியேற்றதும், பிரிஜிட் தனது வேலையை விட்டு விட்டு கணவருக்குத் துணையாக மாறினார்.  இடையில் ஒரு ரேடியோ நிறுவன தலைமைப் பெண்மணியுடன் மேக்ரானுக்கு காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மேக்ரான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இருப்பினும் இந்த செய்திகள் பிரிஜிட்டை புண்படுத்தி விட்டன. அவர் அப்செட் ஆனார். இந்த களேபரத்துக்கு மத்தியில்தான் மேக்ரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.


அதிபரானதும் இந்த பரபரப்புகள் அடங்கிப் போயின. இந்த நிலையில்தான் தற்போது மேக்ரானை பிரிஜிட் தாக்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை மேக்ரான் திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்று பிரான்ஸில் பேசிக் கொள்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்