அன்னை தடாதகை!

Feb 27, 2026,04:22 PM IST

- நவீன் ஸ்ரீதர்


உலகில் பல்வேறு தேசங்களும் இனங்களும் இருப்பினும் அதில் தொன்று தொட்டு சிறப்பாக திகழ்ந்து வருவது பாரத தேசமும் தமிழினமுமே! 


பண்டைய தமிழகத்தை மூன்று பேரரசுகள் சிறப்பாக ஆட்சி செய்து வந்துள்ளனர்; அவர்கள் சேரர்கள், சோழர்கள் மற்றும் பாண்டியர்கள். அவர்களுள் மட்டுமல்லாது உலகின் மிகவும் தொன்மையான அரச குடியாக பாண்டியர் குலமே திகழ்கிறது.   "பாண்டிய நாடே பழம்பதியாகவும்" என்று மாணிக்கவாசகர் இதையே கூறுகிறார். 


பாண்டியர்களுக்கு பல்வேறு சிறப்புகள் இருப்பினும் அவற்றுள் முத்தாய்ப்பானது மணிமகுடம் போல் திகழ்பவர்கள்  அன்னை "தடாதகை" எனப்படும் மீனாட்சி அம்பிகையும், அவளை கரம் பிடித்து பாண்டிய நாட்டை ஆண்ட சுந்தரேசரான சொக்கநாதரான சிவபெருமானுமே. சகல புவனங்களையும் பிரபஞ்சத்தையும் இயக்கும் ஆதிபராசக்தி தான் ஒரு மானிட பெண்ணாக சில இடங்களில் அவதரித்தாலும் அவற்றுள் மிகவும் சிறப்பானது அவள் தடாதகை என்ற திருநாமம் கொண்டு மதுரையம்பதியில் அவதரித்ததே! தன்னிகரில்லா பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது மதுரை மாநகரம். மதுரைக்கு இருக்கும் சிறப்புகள்  வேறு எந்த நகரத்திற்கும் இருக்காது. அரசு, ஆன்மீகம், தமிழ்,பண்பாடு, கலாச்சாரம், தொன்மை, வரலாற்று சிறப்பு,வீரம் முதல் விருந்து வரை இந்நகரில் தலைத்தோங்காதது எதுவும் இல்லை. 




அம்பிகை ஒரு பெண் இளவரசியாக அக்கினியிலே அவதரித்து அவணி(உலகம்) ஆளும் பேரரசியாக முடிசூடி தேவர்கள் முதல் சகலரையும் வென்றும் ஈசனின் மனதையும் வென்றும் அவள் பாதம் பதிய நடந்த ஊர் மதுரை ஆகும். சிவபெருமானும் சுயம்பு லிங்கமாக, மாப்பிள்ளையாக , அரசராக, விறகு சுமப்பவராக , போர் வீரராக, வளையல் வியாபாரியாக, கூலி தொழிலாளியாக, எல்லாம் வல்ல சித்தராக, சாட்சிசொல்பவராக,குதிரை வியாபாரியாக,பாடகராக என பல வடிவங்களில் வந்து தன் பாதங்களால் புனிதப்படுத்தியது இந்த மதுரை மாநகரத்தை தான். திருமாலும்,பிரம்மனும் காண முடியாத ஈசனின் அடியையும் முடியையும் கண்டது இந்த மதுரை மண் தான். ஆம்! இதே மண்ணில் தான் ஈசன் தன் பாதங்கள் பதிய நடக்கிறார், இதே மண்ணை தான் தன் தலையிலும் சுமக்கிறார். இப்படி பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நகரம் மதுரை. 


மதுரை என்றாலே நம் மனதில் அடுத்து நினைவுக்கு வருபவள் மீனாட்சியம்மை தான். தன்னிகரில்லா தனிப்பெரும் கருணை கடலாக இருந்து உலகப்புகழ் பெற்ற ஆலயத்தின் தலைவியாய் திகழ்பவள் அன்னை மீனாட்சி. பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் தற்கால பாடல்கள் வரை அனைத்தாலும் ஒரு தலத்தின் இறைவி சிறப்பிக்கப்படுகிறாள் எனில் அது அங்கயற்கண்ணி பராசக்தியான அன்னை மீனாட்சி மட்டுமே. சக்தி பீடங்களில் மிக உயர்ந்த "மனோன்மணி" பீடமாக திகழ்வது முதல், அம்பிகை வேறு எங்கும் இல்லாத வகையில் அம்பிகை உபாசனை மார்க்கமாக சொல்லப்படும் ஸ்ரீவித்யையில் மிக உயரிய வடிவங்களான  பாலாம்பிகை, புவனேஸ்வரி, கௌரி, சியாமளை, மாதங்கி, பஞ்சதசி, ஷோடசி மற்றும் மகாஷோடசி ஆகிய எட்டு உயரிய ஆற்றல்களையும் ஒரு நாளில் நடைபெறும் எட்டு கால பூஜைகளில் வெளிப்படுத்தி அருள்புரியும் ஒரே உன்னத தலமாகவும் திகழ்கிறது. 




மேலும் முன் தோன்றிய மூத்த சுயம்பு லிங்கமாக சொக்கநாதர் திகழ்வதும், 64 திருவிளையாடல்கள்(சொக்கநாதரின் அருளாடல்கள் அளவற்றவை!) நிகழ்த்தி சங்கம் வைத்து தமிழ் வளர்க்க காரணமாகவும், எம்பெருமான் தானே புலவராக வந்த பெருமையும் என மதுரை தலத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். 


மதுரை தலத்தின் மகிமையை கூறும் நூல்களில் இன்று வரை நமக்கு கிடைத்த நூல்களும் பல, மேலும் நம் கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் நூல்களும் பற்பல. உலகின் நிலப்பரப்பை காகிதமாக்கி, கடல் நீரை மையாக்கி எழுதினாலும் அன்னை மீனாட்சி மற்றும் சோமசுந்தர பெருங்கடவுளின் பெருமைகளை விவரித்திடல் அரிது! அப்பேற்பட்ட தன்னிகரற்ற சிறப்புக்களைப் பெற்ற மதுரை நகரை பற்றியும் அம்மையப்பரான ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பற்றியும் தொடர்ந்து  சிந்திப்போம்.


மீனாக்ஷீம் !!!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்