பழ மொழிகள்.. பெண்ணின் வாழ்வு என்பது கணவனின் அன்பே!

Apr 08, 2026,03:16 PM IST
- டி.கலைமணி

நமது முன்னோர்கள் பழமொழிகளை வகுத்து வைத்துச்  சென்றுள்ளனர். நமது வாழ்க்கை நலன் கருதி சொல்லப்பட்ட மொழிகள் அவை. அவற்றின் வழி நடந்தால் வாழ்க்கை சிறப்பு உறுதி.

நமது முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்ற சில பழமொழிகள் இங்கே..

1.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
2.ஆசை கண்ணை குருடாக்குகிறது. காதை செவிடாக்குகிறது.
3.பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.
4.பெண்ணின் வாழ்வு என்பது கணவனின் அன்பே.
5.மனிதன் மதுவைக் குடிக்கிறான் பின்னர் மது மனிதனைக் குடிக்கிறது.



6.அரசனை நம்பி புருஷனை இழந்தாள்.
7.தாய்க்கு உடுத்த சேலை இல்லை தனயன் செய்கிறான் வஸ்திர தானம்.
8.பணம் பேச ஆரம்பிக்கும் போது உண்மை ஊமையாகி விடுகிறது.
9.காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
10. தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி.
11 .அஞ்சிலே வளையாதது ஐப்பதில் வளையுமா?
12.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
13.கடன் இல்லாத வனே பணக்காரன், உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
14.மனித அன்பின் பிறப்பிடம் - தாய்.
15.குடிப்பது கூழ்! கொப்பளிப்பது பன்னீர்!

(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்