- ஸ்வர்ணலட்சுமி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவிலில் அமைந்துள்ள பிரம்மா சன்னதி மற்றும் வன்னி மரத்தின் சிறப்புகளை பார்ப்போம்.
திருப்பாண்டி கொடுமுடி திருக்கோயில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் காவிரி நதியின் மேற்கு கரையில் ஈரோட்டில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும்,கரூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கொங்கு நாட்டுக்குரிய ஏழு தலங்களில் கொடுமுடியும் ஒன்றாகும். திருப்பாண்டிக் கொடுமுடி கோவிலில் அமையப்பெற்றுள்ள வன்னி மரம் மற்றும் பிரம்ம தேவரின் சன்னதியின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்...

வன்னி மரம் இத்திருத்தலத்தில் தலவிருட்சமாக சுமார் 3000 வருடங்கள் பழமையானது அமைய பெற்றுள்ளது கோவிலுக்கு தனிச்சிறப்பாகும். ஒரு புற கிளைகள் முற்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமல் பூக்காமல் காய்க்காமல் தெய்வீக தன்மையுடன் திகழ்கிறது. இம் மரத்தின் இலைகளை காவிரி தீர்த்த கலசத்தில் இட்டு பழனி ஆண்டவர் மற்றும் பிற தெய்வங்களின் பூஜைகளுக்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.
ஸ்ரீ பிரம்மா இந்த தெய்வீக மரத்தின் அடியில் அமர்ந்த திருக்கோளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.நான்கு கரங்களுடன் அட்ச மாலை கமண்டலத்துடன் அபூர்வமாக மூன்று முகம் கொண்டவராக அருள் புரிகிறார்.இம்மூன்று முகங்கள் இச்சாசக்தி, கிரியாசக்தி,ஞானசக்தி என மூன்று சக்திகளாக ஆன்மீக பெரியோர்களால் நம்பப்படுகிறது. இத் கோவில் தல த்தில் எழுந்தருளியுள்ள பிரம்ம தேவனை வழிபடுவதனால் பூர்வ புண்ணிய தோஷ நிவர்த்தி,பசு சாபம் பற்றி சாபம், பிராமண சாபம் மற்றும் பல்வேறு கிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது.மேலும் கல்வியில் மேன்மை பெறவும் குரு அருள் போன்றவை அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இக்கோவிலில் அமைந்துள்ள வன்னி மரத்தின் அடியில் அமர்ந்துள்ள வன்னி பிரம்மாவை வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் அபிஷேகம் ஆராதனைகள் செய்வதற்கும் பிரம்மாவின் முன் அமர்ந்து தியானம், புனர்ஜென்ம பூஜை வழிபாடும் பக்தர்கள் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிந்து அருள்மிகு பிரம்மாவை தரிசித்து வழிபட்டு செல்கிறார்கள்.இவை தினசரி நடைபெறும் நிகழ்வுகளாக திகழ்கிறது. பழனிக்கு காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் கலசத்தில் காவிரி தீர்த்தம முத்தரித்து , வன்னி இலையுடன் பழனி மலை ஆண்டவருக்கும்,இதர தெய்வங்களுக்கும்
இத்த லத்தில் இருந்து வருடம் தோறும் பக்தர்கள் தீர்த்த காவடி கொண்டு செல்வது இக்கோவிலின் சிறப்பாகும்.
இங்குள்ள வன்னி மரத்தினை முறையே 12 முறை (கால் மண்டலம்) 24 முறை (அரைமண்டலம்) 48 முறை (ஒரு மண்டலம்), வயதின் எண்ணிக்கை,108 என்ற முறையில் வலம் (பிரதிக்ஷணம் )செய்து நன்மை அடைகிறார்கள். இப் புகழ்பெற்ற வன்னி மரத்தினை பிரதட்சணம் செய்வதால் சனி, குரு,ராகு, கேது போன்ற கிரக தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் இந்த வன்னி மரம் சனி பகவானுக்கு உரிய மரமாகவும்,அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருச்சமாகவும் கருதப்படுவதனால் பக்தர்கள் இத்தலத்தினை நாடி வருகின்றனர். இந்த வன்னிமர இலைகளை செம்பு குடத்தில் தண்ணீரில் போட்டு வைத்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.இத்தனை சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
இத் திருக்கோயிலில் திருமணம் ஆகாத ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தை பேறு இல்லாத மணமக்கள் அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வேண்டுதல் வைத்து,, காவிரியில் நீராடி திருக்கோயிலுக்குள் வந்து தேவையான பரிகார பூஜைகள் செய்து பலன் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். எந்த ஒரு காரியத்தையும் முழு நம்பிக்கையுடனும் முழு மனதார செய்வதனால் கட்டாயம் நிறைவேறும்.
மேலும் சிவ பக்தர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் திருப்பாண்டி கொடுமுடி கோவிலின் ஏனைய சிறப்புகளை அடுத்த பதிவில் காண்போம்... மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}