- ஆ.வ.உமாதேவி
எந்த செயலை தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டு விட்டே தொடங்குதல் நமது மரபல்லவா? அதனால்தான், நானும் இப்பழமொழியில் இருந்து தொடங்குகிறேன்.
பொதுவாக இப் பழமொழிக்கு நாம் எடுத்துக் கொள்ளும் பொருள் என்னவெனில், நாம் ஒரு செயலை எண்ணிச் செயல்பட தொடங்கிய பொழுது அது நிறைவேறாமல், வேறாக முடிவடைவதை குறிக்கிறது. நகைச்சுவையாக சொல்ல வேண்டுமானால், பிள்ளையார் உருவத்தை களிமண்ணில் செய்ய தொடங்கிய ஒருவன் அதை செய்து முடித்த பிறகு, முடிவில் பார்த்தால் குரங்கு போல தோற்றமளித்ததாம். இவ்வாறுதான் பல பேர் இந்த பழமொழியின் பொருளை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
உண்மையான பொருள் இதுவன்று.

இந்த பழமொழி ஆலய தரிசன விதிமுறைகளை, மக்களுக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்டதாகும். இந்துக்கள், எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் முழுமுதற் கடவுளாம் விநாயகரை தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும். பிறகு பிராகரங்களில் பரிவார மூர்த்திகளை(பரிவார தேவதைகளை) வணங்க வேண்டும். அதன்பின் மூலவரை வணங்க வேண்டும். அதனை அடுத்து, நவகிரகங்களைச் சுற்றி வந்து வணங்க வேண்டும். இறுதியாக கோவிலை விட்டு வெளியேறும் முன்பு ஆஞ்சநேயரை வணங்கி விட்டு கோவிலை விட்டுப் புறப்பட வேண்டும்.
இந்த தரிசன விதிமுறைகளை வலியுறுத்தவே பிள்ளையாரில் (காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடுவதில்) தொடங்கி, ஆஞ்சநேயரில் (குரங்கில்) முடிக்க வேண்டும் என்பதன் விளக்கமே, பிள்ளையாரில் பிடிக்க குரங்கில் முடிந்தது போல என்னும் பழமொழி.
இதன் உண்மையான பொருள் உருமாறி, தேய்ந்து தேய்ந்து தவறான பொருள் கொள்ளும் அளவில் இருந்து வருகிறது.
இனியாவது நாம் இப்பழமொழியின் உண்மைப் பொருளை உணர்ந்து, ஆலயங்களுக்குச் செல்லும் போது நம் முன்னோர்கள் சொன்ன வழிபாட்டு விதிமுறைகளை, பின்பற்றி வணங்கி இறைவன் அருளை பெறுவோமாக!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
{{comments.comment}}