சென்னை: "ஜோ" படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் டி.அருளானந்து தயாரிக்கும் புதிய படம் தான் "கோழிப்பண்ணை செல்லதுரை". இது ஒரு படம் அல்ல.. வாழ்வியலைச் சொல்லும் பாடம் என்று சொல்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
மதுரையில் பிறந்த சீனுராமசாமி அடிப்படையில் ஒரு கவிஞர். எதார்த்த வாழ்வியல் வெளிகளில் கதைகளை பிரதிபலிக்கும் சீனு ராமசாமி, தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநயகனாக அறிமுகம் செய்தவர். மேலும், விஜயசேதுபதிக்கு மக்கள் செல்வன் சேதுபதி என்ற பட்டத்தையும் சூட்டியவர்.
நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை. இத்திரைப்படம் கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல் கதையாகும். காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் ஏகன். இப்படத்தில், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்) சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை மற்றும் பலர் நடிக்கிறார்கள். N.R. ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
சீனு ராமசாமியின் படங்களில் "வாழ்க்கை" இருக்கும்.. வாழ்வதன் சவால்கள், சங்கடங்கள், சஞ்சலங்கள் கண்டிப்பாக இருக்கும். இப்படமும் அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் கோழிப்பண்ணையைச் சுற்றிப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}