குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு விலை உயர்ந்த பொருட்கள் சேரும். வழக்கு, விவகாரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. அவ்வப்போது தோன்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வாக்குவன்மை மேம்படும். தன தான்ய விருத்தி உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது நம்பிக்கையுடன் எதிலும் செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் பாகப்பிரிவினைகள் மூலம் எதிர்பார்த்த பங்குகள் கிடைக்கும். புது வீடு மற்றும் மனை வாங்கும் சூழல் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் மன அழுத்தங்களுக்கு அவ்வப்போது ஆளாகுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும். பொழுதுபோக்கு உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். விடாமுயற்சியால் நினைத்த சில பணிகளை முடிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:

உயர்வு மற்றும் வருமான மேன்மை ஏற்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். முயற்சிக்கு ஏற்ப விரும்பிய பணி மற்றும் இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. நிர்வாக பணிகளில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். வெளியூர் வேலை வாய்ப்புகளில் சிந்தித்துச் செயல்படவும். அறுவை சிகிச்சை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீதித் துறையில் இருப்பவர்களுக்கு மாற்றம் ஏற்படும். அரசுப் பணியாளர்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வியாபாரிகளுக்கு:
பணிகளில் அலைச்சல் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடிகள் குறையும். விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். தேவைக்கேற்ப வருமானம் இருந்தாலும் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நெருக்கடிகளை தவிர்க்கும். அதிகாரத்திலுள்ள நபர்களின் அறிமுகம் உண்டாகும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு ஆதாயம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு:
விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். மனதளவில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சந்தேக பார்வையை தாண்டி செயல்படுவது நல்லது. புதிய அணுகுமுறைகளைச் செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
அரசியல்வாதிகளுக்கு:
மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். இலக்குகள் அறிந்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. ஆவேசமான பேச்சுக்களை தவிர்க்கவும். தொண்டர்களின் ஆதரவுகளால் மறைமுகமான ஆதாயம் அடைவீர்கள். பதவிக்கான சில விரயத்தால் சேமிப்புகள் குறையும். மறைமுகமான வருமானம் மேம்படும்.
மாணவர்களுக்கு:
படிப்பில் கூடுதல் கவனம் தேவை. நீர்வள மேன்மையில் தனிப்பட்ட ஈர்ப்புகள் உண்டாகும். மின்னியல் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்
பெண்களுக்கு:
மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மதிப்பு உயரும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். சிறு மற்றும் குறு தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். மற்றவர்கள் உங்கள் மீது கூறும் அவச்சொற்களை பெரிது படுத்தாமல் இருக்கவும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்கவும். தாய்வழி உறவினரால் சிறு குழப்பங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும்.
வழிபாடு:
புதன்கிழமைதோறும் ஶ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கி வர கவலைகள் விலகும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}