குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024: விகடகவியாக செயல்படும் கன்னி ராசி அன்பர்களே!

Apr 05, 2024,11:40 AM IST

விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். வருமானங்கள் சாதகமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப சில விரயங்களும் சமமாக இருக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் விட்டுக் கொடுத்து செல்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். கனிவான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். 


சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. விவசாய பணிகளில் இருந்த சோர்வுகள் விலகும். தந்தை வழி உறவுகள் இடத்தில் இருந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த வெளியூர் பயணங்கள் கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல்கள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்துவீர்கள். தவணை முறையில் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


வியாபாரிகளுக்கு:




வியாபார விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. உயர்மட்ட அதிகாரிகளால் சில தடைகளும் ஆதாயமும் ஏற்படும். வெளிவட்டத்தில் உங்கள் மீதான மதிப்புகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். கூட்டாளிகள் இடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். சில முக்கியமான முடிவுகளை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. ஆடம்பரமான பொருட்கள் விற்பனையில் ஆதாயம் அடைவீர்கள். வேலை செய்பவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோக பணிகளில் சில தவறுகளை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேல் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சிலரின் ஒத்துழைப்புகள் மூலம் நீண்ட நாள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊதிய உயர்வுகளில் இருந்த தாமதங்கள் விலகும். பணி நிமிர்த்தமான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் அடிக்கடி ஏற்படும்.


கலைஞர்களுக்கு:


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ரசிகர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல்கள் அமையும். வரவுகள் தேவைக்கேற்ப இருந்தாலும், செலவுகளும் அதற்கு நிகராக இருக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.


அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது பல வழிகளில் முன்னேற்றத்தை உண்டாக்கும். வருமான உயர்வு குறித்த விஷயங்களில் நேர்மையை கடைபிடிப்பது நல்லது. கட்சி மேலிடத்தின் ஆதரவுகள் மனதளவில் புதிய தன்னம்பிக்கையையும் செயல்களில் வேகத்தையும் ஏற்படுத்தும். தொண்டர்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க கூடிய மனப்பக்குவமும் தன்னம்பிக்கையும் மேம்படும்.


பெண்களுக்கு:


பெண்களுக்கு சுப காரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய சேமிப்பு திட்டங்களில் விதிகளை அறிந்து சேர்வது நல்லது. குழந்தைகள் இடத்தில் அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் போவது மன அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் சாதகமாக அமையும்.


மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த மறதி பிரச்சனைகள் குறையும். உயர்கல்வியில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி கல்வியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளில் படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைப் போக்கில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.


வழிபாடு:


வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்துவர வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்