சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் சாதகமாகும். மனை சார்ந்த முதலீடுகளில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் மாற்றம் உண்டாகும். உறவுகள் இடத்தில் பொறுமையை கையாள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும்.
பணி விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. மறைமுகமாக இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் சில தெளிவுகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். கேளிக்கை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான ஆசைகள் பிறக்கும். சொகுசு ரக வாகனம் மீது தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மருத்துவ தொடர்பான துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கப்பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு:

வியாபாரப் பணிகளில் ஒருவிதமான சோர்வான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மூலிகை மற்றும் தானியங்கள் தொடர்பான வியாபாரங்களில் லாபம் மேம்படும். கூட்டாளிகளை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். தொழில் சார்ந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உடை மற்றும் ஆபரணம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சாமர்த்தியமாக செயல்பட்டு தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். புதுவிதவிதமான உணவுகள் மீது ஆர்வமும் ஆசையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
கலைஞர்கள் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய இடங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களில் இருந்த சோர்வு குறையும். மனதளவில் தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகள் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. மறைமுகமான சில போட்டிகளால் மாற்றமான அனுபவம் ஏற்படும். தலைமையின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். தொண்டர்களை புரிந்து கொள்வீர்கள். வருமான விஷயங்களில் ஏற்ற, இறக்கம் உண்டாகும்.
பெண்களுக்கு:
குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருத்தல பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதிய வேலைக்கான முயற்சியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்புகளை மேம்படுத்திக் கொள்வீர்கள் நெருக்கமானவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மாணவர்களுக்கு:
மாணவர்கள் கல்வி விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உயர்கல்வியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பாடங்களை புரிந்து படிப்பது மறதி பிரச்சனைகளை தவிர்க்கும். உடற்பயிற்சி செயல்களால் ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் புதிய தெளிவு பிறக்கும். ஆசிரியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் இடத்தில் விவேகத்துடன் செயல்படவும்.
வழிபாடு:
வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதம், தடை விலகும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}