குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024:  எந்த சூழலிலும் தைரியமாக செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!

Apr 05, 2024,07:47 PM IST

சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை அவ்வப்போது சரி செய்து கொள்வது பயனற்ற விரயங்களை தவிர்க்கும். பெற்றோர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். 


தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிலும் முன் கோபமின்றி நிதானமாக செயல்பட வேண்டும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று புதிய பயிர் விளைச்சலை மேற்கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். மனதிற்கு நெருக்கமாக இருக்கக்கூடியவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.


வியாபாரிகளுக்கு:




வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். புதிய வியாபார விஷயங்களை நன்றாக யோசித்த பிறகு மேற்கொள்வது நல்லது. தொழில் நிமிர்த்தமான பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் சார்ந்த தொழிலில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகத்தில் உழைப்புக்குண்டான வருமானம் தாமதமாக கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மேலதிகாரிகள் உங்கள் திறமைகளை கண்டு பாராட்டுவார்கள். பணிகளில் சில பொறுப்புகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்து கொள்வது நல்லது.


கலைஞர்களுக்கு:


எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. புதிய ஒப்பந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. துறை ரீதியான வெளியூர் பயணங்களால் மனதளவில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். ஆடை வடிவமைப்பு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.


அரசியல்வாதிகளுக்கு:


நினைத்த சில பணிகளில் பகுத்தறிந்து முடிவெடுப்பது எதிர்காலத்திற்கு நல்லது. பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முடிவுகளில் உங்களின் எண்ணங்கள் படிப்படியாக நிறைவேறுவதில் பொறுமை காப்பது நல்லது. நெருக்கமானவர்களே சில விஷயங்களில் தடையாக இருப்பார்கள்.


பெண்களுக்கு:


வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது உங்கள் மீதான நல்ல மதிப்பை மேம்படுத்தும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல்கள் ஏற்படும். பெண்களுக்கு பிறமொழி சார்ந்த மக்களின் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் திரும்ப கிடைக்கும். பண விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.


மாணவர்களுக்கு: 


மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற பாடங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். படிப்பதை ஒன்றுக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவமும் சமூகம் பற்றிய கண்ணோட்டமும் மாறுபடும். விளையாட்டுப் போட்டிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.


வழிபாடு:


தினந்தோறும் விநாயகரை வழிபாடு செய்துவர மனதில் அமைதியும், சஞ்சலங்களும் குறையும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்