- மஞ்சுளா தேவி
சென்னை: முன்னணி கதாபாத்திரங்களில் விதார்த் மற்றும் யோகி பாபு நடித்த குய்கோ திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்திற்கு யு சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கதாசிரியராக வலம் வரும் அருள் செழியன் முதல் முதலாக குய்கோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றியவர். இப்படத்தை ஏ எஸ் டி பிலிம்ஸ் எல் எல் பி தயாரித்துள்ளது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்து உள்ளார்.

சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மற்றும் நடிகர் விதார்த் முன்னணி கதாபாத்திரத்திலும், ஸ்ரீ பிரியங்கா, துர்கா, இளவரசு, முத்துக்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், யோகி பாபு வளைகுடா நாட்டில் ஒட்டகம் மேய்ப்பவர். எதார்த்தமாக இவருடைய தாய் தவறி விடுகிறார். தன் தாயைக் காண வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் நடிகர் விதார்த் ஃப்ரீசர் பாக்ஸை அந்த கிராமத்திற்கு கொண்டு வருகிறார். அப்போது ஊர் மக்களுக்கும், விதார்த்துக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதையாக உள்ளது. முதலில் இப்படத்திற்கு குடியிருந்த கோவில் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது. பின்னர் இதனை சுருக்கி குய்கோ என்று பெயர் மாற்றம் செய்தோம் என்று கூறினார்.
இந்நிலையில் இப்படத்தில் ஏ சிவப்பழகி என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பத்துடன் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குய்கோ படம் நவம்பர் 24ஆம் தேதி வெளிவரும் நிலையில், விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் மற்றும் சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் படமும் அந்த நாளில் தான் வெளிவர இருக்கிறது என்பது நினைவிருக்கலாம். மக்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக அனைத்து படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!
இதற்கிடையே, இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்
பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்
என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்
மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??
மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!
மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!
{{comments.comment}}