- மா.கலைவாணி கோபால்
"கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்"-சுந்தரமூர்த்தி நாயனார்.
இன்று திருக்கடையூர், அன்று திருக்கடவூர் என அழைக்கப்பட்ட சோழ நாட்டு ஊரில் பிறந்தவர் கலயனார்.
இவர் திருக்கடையூர் ஆலயத்துநாதர் அமிர்த கலயனார் மீது அதிக பக்தி கொண்டு சதா சர்வ காலமும் ஆலயத்தில் குங்கிலிய கலயத்துடன் நின்றிருந்ததால் அவர் குங்கிலிய கலயனார் என பெயர் பெற்றார்.
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அனுதினமும் இச்சேவையினை மிகுந்த பொருட்செலவில் செய்து கொண்டிருந்தார். இந்தக் குங்கிலிய கலயனார் பெயரை நிலை நிறுத்தம் பொருட்டு இறைவன் ஒரு திருவிளையாடல் புரிந்தார்.
குடும்பஸ்தன் ஒருவன் இறை கடமையில் இருந்தால் பொருள் அல்லவாமூலதனம், அதை குறி வைத்தார். சிவன். குங்கிலிய கலயத்தார் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வறுமை சூழ்ந்தது தன்னிடம் உள்ள ஆடு ,மாடு, நகை ,என எல்லாவற்றையும் விற்று குங்கிலியம் வாங்கி புகை பரப்பினார் அடியார்.

ஒரு கட்டத்தில் எதுவும் இல்லை, அந்நேரமும் தன்னால் முடிந்த அளவு போராடி எவ்வளவு குங்கிலியம் செலுத்த முடியுமோ அவ்வளவு செலுத்தி அமிர்த கலயனாருக்கு இறைப் பணி செய்து வந்தார்.
மன்னனிடமும் சென்று உதவி கேட்டார். ஆனால், உரிய பதில் கிடைக்கவில்லை. இறைவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்த பக்தனுக்கு கையில் காசு இல்லை என ஒரு நிலை வரும்போது அவன் மனம் கொதிக்கும். அப்படி தன் குடும்பத்தின் நிலை; குழந்தைகள் என எல்லாம் மறந்து அவர்களின் துயரம் மறந்து குங்கிலியம் நினைவாக சுற்றி பித்து பிடித்தவர் போல் அலைந்தார் கலயத்தார்.
எப்பாடுப்பட்டேனும் உள்ளங்கை அளவு குங்கிலியத்தை தூபமாக்கி சிவனுக்கு காட்டுவார். அது, நொடியில் முடிந்துவிடும் ஓங்கி அழுவார்.
நல்ல பக்தன் சோதனை வரும் போது ,கடவுளின் சோதனை என சொல்ல மாட்டான்: திட்ட மாட்டான்.. மாறாக கடவுளுக்கு தான் ஏதோ குறை வைத்தேன் என்று ஓங்கி அழுவான். அடியாரும் அப்படித்தான் அழுதார்.
ஊரெல்லாம் செல்வத்தை கரியாக்கி விட்டான் என்ற அவ சொல்லுக்கு ஆளாயினார். தரையடியில் இருக்கும் நீரும் அடியார் மனமும் சாமான்ய உலக கண்களுக்கு தெரியாது. வீட்டில் மிஞ்சிய வறுமை குழந்தைகளை கடுமையான பட்டினியில் தள்ளி விட்டது. இனியும் பொறுக்க முடியாது எனும் நிலைமையில் சுமங்கலி ஆன அவர் மனைவி யாரும் செய்ய துணியாத தியாகத்தை செய்யத் துணிந்தார். தன் தாலியினை விற்று குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்க முடிவு செய்து கணவரிடம் தாலியை கழட்டி கொடுத்தார். அதில், குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வர சொன்னார்.
அங்கே தான் உச்சகட்ட சோதனை அவருக்கு வந்தது. போகும் வழியில் ஒரு குங்கிலிய வியாபாரி வந்தார். அவர் மூட்டையில் இருந்த குங்கிலியத்தை கண்டதும், அடியாருக்குள் பக்தி பெருக்கெடுத்து, தன்னை மறந்தார். தன் நிலை மறந்தார். குடும்பம் குழந்தை பசி மறந்தார்.
குங்கிலியம் கண்டதும் அவருக்கு ஒரே நோக்கம், அதை வாங்கி ஆலயத்தை நோக்கி ஓடிச் சென்றார். இறைவனுக்கு அள்ளி அள்ளி புகைத்து மகிழ்ந்தார். புகை மறைவில் சிரித்துக்கொண்டிருந்தார் சிவபெருமான் .
கோவிலுக்கு குங்கிலியம் இட்டாரே, தவிர தன் குடலுக்கு அவர் ஏதுமிடவில்லை. குழந்தைகள் என்ன ஆனார்கள் மனைவி என்ன ஆனார், என்பதை மறந்து ஆலயத்திலேயே உறங்கினார்.
அடியார் கனவில் சிவன் ஒரு அடியாராக வந்து "வீட்டுக்குச் சென்று பாலமுது உண்ணப்பா " என்று சொன்னார்.
எழுந்த அடியாருக்கு அந்த தாலி, நெல் வாங்க தந்த தாலி என்பது நினைவுக்கு வந்தது. ஐயோ! உணவுக்கு தந்த தாலியை குங்கிலியம் வாங்கி விட்டேனே,! குடும்பம் என்ன செய்யும்? குழந்தைகள் என்ன ஆகி இருப்பார் ?என்று நினைவு வர வீட்டை நோக்கி ஓடினார்.
ஆனால் ,அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் சென்றபோது, நெல்மணிகளும் தங்கமும், வைரமும் நிறைந்து கிடந்தன. மனைவியும் பிள்ளைகளும் வந்து அவரைக் கட்டிக் கொண்டனர். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை ஆனாலும், அதிலும் குங்கிலியம் இருக்கின்றதா,? என்பதை பார்த்தார்.
இறைவனின் கருணையை நினைத்து , கண்ணீர் மல்கி நன்றி கூறி திரும்பவும் அவரது பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். அந்த ஒரு கோயில் மட்டும் அல்லாது சுற்றியுள்ள அனைத்து கோயில்களுக்குமே குங்கிலியம் கொடுத்து பணி செய்து வந்தார்.
திருப்பனந்தாள் ஆலயத்துக்கும் சென்று அங்கிருந்து அருணஜடேஸ்வர கோயிலுக்கும், அடிக்கடி குங்கிலியம் இட்டு மனமுருக அருண ஜடேஸ்வரரை வணங்குவார்.
திருப்பனந்தாள் சிவனுக்கு" தாடகை" எனும் பெண் அனுதினமும் பூச்சூடி மலர் சூடிவழிபட்டு வந்தாள்.
ஒரு நாள் மலர் சூட அப்பெண் எத்தனித்தபோது மாலை கைத்தவறி கீழே விழுந்தது .அதை குனிந்து கீழே விழாதவாறு பிடிக்க முற்பட்டபோது சிவனுக்கு சூடும் மாலை கிழே விழவில்லை. நிமிர்ந்து பார்த்தாள். பெரும் அதிர்ச்சி காத்திருந்தது .ஆம்! சிவனே! அவளை நோக்கி குனிந்து நின்றார். மாலையினை ஏற்றார் . . லிங்கம் சாய்ந்தது. ஊர்மக்கள் அப்பெண்னணின் பக்தியினை வியந்து பாராட்டினர் . ஆனாலும் லிங்கம் சார்ந்து இருப்பது முறையாகாது என ஊர் மக்கள் கருதினர்.
சரிந்த ஒரு பக்க லிங்கத்தை நிமிர்த்த மக்கள் போராடினர். அப்போது ஆட்சியில் இருந்த மணிமுடிச்சோழன் லிங்கத்தை நிமிர்த்த ஓடிவந்து நின்றான். யானைகள் குதிரைகள் என அனைத்தையும் பூட்டி நிமித்தி பார்த்தான். முடியவில்லை.
ஒரு மிகுந்த பக்தி கொண்டவரால் மட்டுமே லிங்கத்தை நிமிர்த்த முடியும் என்று கேள்விப்பட்டு கலிய நாயனாரை அழைத்தான். அவரும் ,தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு "சிவனே நான் உனக்கு குங்கிலியம் இடுவதை நீ ஏற்றுக் கொண்டால் லிங்கம் நிமிரட்டும்" இல்லையேல் என் உயிர் பிரியட்டும் "என உரக்கச் சொல்லி இழுக்க ஆரம்பித்தார். லிங்கம் நிமிர்ந்தது. மன்னன் ஓடிவந்து நாயனார் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அதுமட்டுமல்லாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்று அவரை உபசரித்து தன் மகள்களுக்கும் ஆசி வழங்குமாறு கூறினார். அதில் ஒருவரே 63 நாயன்மார்களில் பின்னாளில் உருவான" மங்கையர்க்கரசி அம்மையார்"
தன் வாழ்நாள் முழுவதும் குங்கிலிய சேவை புரிந்து தன் வாழ்வு முடிந்த பின் கைலாயம் சென்றடைந்தார்.
இவரின் குருபூஜை ஆவணம் மூல நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. திருக்கடையூர் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய இருத்தலங்களிலும் மகா விசேஷமாக இவரின் குருபூஜை குங்கிலிய புகை பூஜையுடன் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
திருக்கடையூரில் பிறந்த குங்கிலியக் கலய நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
{{comments.comment}}