- மா.கலைவாணி கோபால்
"கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பருக்கு அடியேன்"- என்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் புகழ்யாரத்திற்கு உரியவர் நம் கண்ணப்பன் நாயனார்.
இன்று ஆந்திராவின் தென் எல்லையாகவும், தமிழ்நாட்டில் வட எல்லையாகவும், இருக்கும் பகுதிகள் அன்று 'பொத்தப்பி' என்ற வனப்பகுதியாக இருந்தது. அது, வனப்பகுதி என்பதால், அங்குள்ள மக்களுக்கு வேட்டை என்பது அவர்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. அதனால் அது 'வேட்டுவ சமூகம் 'என்று அழைக்கப்பட்டது. அதில் வாழும் மக்களும் சிறு சிறு கூட்டமாகவே தங்களை கொண்டு ஒரு சமூகத்தை உருவாக்கி வாழ்ந்து வந்தனர்.
வேடுவர் சமூகத்தில் அவர்களுக்கு உள்ளாகவே ஒரு தலைவன் நியமிக்கப்பட்டு அவன் தலைமையிலே அச்சமூகம் வழிநடத்தப்பட்டு வந்தது. அப்படி , வாழ்ந்து வந்த சமூகத்தில் ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் நாகன். அவரின் மனைவி பெயர் தத்தை அந்த தம்பதியினருக்கு நெடுங்காலம் குழந்தை இல்லாமல் பிறந்தவர் தான் 'திண்ணன் 'என்று பெயரிடப்பட்ட நம் கண்ணப்பர்.
ஒரு வேட்டுவ குழந்தை படிக்க வேண்டிய வேட்டை கலை, தற்காப்பு மருத்துவம் என அனைத்தையும் கற்று வளர்ந்தவர் திண்ணன். அக்காலங்களில், வேட்டுவ இனம் காட்டுக்குள் இருந்தாலும் அரக்கு, தேன் ,மூலிகை, தந்தம், கொம்பு என காட்டுப் பொருட்களை கொடுத்து மக்களிடம் பொருள் பெரும் பண்டமாற்ற வியாபாரம் இருந்தது.
அதனால், அவர்கள் காட்டுக்குள் நிறைய செல்ல வேண்டி இருந்தது. திண்ணனும் வளர்ந்த பருவம் வந்தவுடன் காட்டுக்குள் வேட்டைக்கு கிளம்பினான். திண்ணன் முதல் முதலாக செல்வதால் அவர்களின் காவல் தெய்வம், குடி தெய்வம், என எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வேடுவத் தொழிலுக்கு கிளம்பினான். திண்ணன் புதிது, என்பதால் அவனுடன் நாணல் மற்றும் காடன் என்ற இரு நண்பர்களும், வேட்டைக்கு நாய்களையும் ,அவருடைய அப்பா அதாவது, (வேடுவர் தலைவர்) துணைக்கு அனுப்பினார்.

திண்ணனுக்கு அவ்வளவு ஆக ,அனுபவம் கிடையாது. வேட்டைக்கு நாய் தான் முதல் பலம். அதனால் ,அவைகள் ஆபத்தை எச்சரிப்பதும் முந்தி சிந்து ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்துவதும் அவைகளின் வேலையாக இருந்தது.
தங்களின் வேட்டை இடத்தையும் தாண்டி உடுப்பூர் பக்கம் காட்டுக்குள் வந்த போது அவர்களின் நாய்கள் ஒரு காட்டுப் பன்றியினை மோப்பம் பிடித்து விரட்டியது. திண்ணன் உட்பட மூவரும் பின்னால் ஓடினர். அந்த காட்டுப் பன்றியும் மகா வேகமாக ஓடியது. ஓடைகள் தாண்டி பள்ளம் மேடுகளை தாண்டி அனாசமாக ஓடியது .முதல் வேட்டை என்பதாலும், இளமை துடுக்காலம் திண்ணனும் சளிக்காமல் ஓடினான்.
ஒரு கட்டத்தில் பன்றியினை நாய்கள் ஒரு ஆற்றின் வெட்ட வெளி கரையில் மரிக்க பன்றி 'சட் 'என திரும்பி எதிர்பக்கம் வர மயக்கம் மருந்து கொண்டிருந்த ஈட்டியினை சரியாக எறிந்தான் திண்ணன். கொஞ்சம் ஓடிய பன்றி மரம் போல் விழுந்து சரிந்தது.
அப்போது, சற்று தொலைவில் சிறிய மேட்டில் அக்காலத்தில் "சிவமுனிகள்" அதிகம் வழிபட்ட லிங்கம் ஒன்று திண்ணனின் கண்ணில் பட்டது. அந்த லிங்கத்தின் மேனி திண்ணனை மிகவும் ஈர்த்தது.
அது என்னவென்று, நண்பர்களிடம் விசாரித்தான். அப்போது அது குடுமி தேவர் கோயில் என நண்பர்கள் உரைத்தனர். அதை ஏற்கனவே இருமுறை பார்த்ததாகவும் ,ஒரு சிவாச்சாரியார் வந்து பூஜை செய்து செல்வதாகவும் திண்ணனிடம் அவரது நண்பர்கள் கூறினர்.
அதைப் பார்த்தவுடன் அங்கு செல்லும் உந்துதல் திண்ணனுக்குள் ஏற்பட்டது. உயிர்களின் ரத்தமும், சதையும் ,வெந்து வேகாத,. மாமிசம் தவிர.... ஏதும் தெரியாது. முதன்முதலில் அவன் கோயில் பக்கம் வருகின்றான். லிங்கத் திருமேனி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். ஏதோ பல ஜென்மமாக தேடி ஒரு பொருள் கிடைத்தது போல லிங்கத் திருமேனி கட்டி அனைத்து முத்தமிட்டான். இரவு நேரம் நெருங்கியதை தொடர்ந்து இறந்த பன்றியின் உடலை எடுத்துக் கொண்டு நண்பர்கள் வந்து அவனை காட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
ஆனால் ,அன்று இரவு முழுவதும் அந்த லிங்க திருமேனி மட்டுமே திண்ணனின் கண்களில் காட்சியளித்தது. மறுநாள் அதைக் காணும் ஆவலில் அவன் தானாகவே குடுமி தேவர் கோயில் நோக்கி நடந்தான். குடுமி தேவர் தனியாக இருப்பது போன்ற உணர்வு தோன்றியது. அவருக்கு உணவு , யார் தருவார்? யார் பாதுகாப்பு? என மனசுக்குள் பல கேள்விகளை எழுப்பினான். நண்பர்கள் கூறியது அவனுக்கு நினைவு வந்தது.
அங்கு ஒரு பூசாரி வருவார் ,அவர் அந்த திருமேனிக்கு தண்ணீரை அபிஷேகம் செய்து மாலைகள் சாற்றி, பிரசாதம் வைத்து வழிபடுவார். எனக் கூறியது நினைவுக்கு வந்தது. தானும் அவ்வாறு செய்ய எண்ணம் கொண்டான். அருகில் உள்ள ஆற்றங்கரையில் தண்ணீரைக் கொண்டு வாயில் முகர்ந்து, அங்கு கிடைத்த காட்டுப் பூக்களை தன் குடிமிகளில் சொருவிக்கொண்டு, கிடைக்கும் மாமிசத்தை படையல் இட கொண்டு வந்தான்.
திருமேனியின் மீது ஏற்கனவே, சிவாச்சாரியார் சூட்டிய மாலைகள் காய்ந்த நிலையில் இருந்தன. அவற்றை காலால் சுத்தம் செய்து, வாயில் கொண்டு வந்த நீரை திருமேனியின் மீது அபிஷேகம் செய்து, தலையில் சொருகி வைத்த காட்டுப் பூக்களை திருமேனியின் மீது சூட்டினான். கையில் இருந்த இறைச்சியை எந்த இறைச்சியின் சுவை நன்றாக உள்ளது என்பதை தன் நாவில் வைத்து சுவை பார்த்து எச்சில் இறைச்சியை பார்த்து பார்த்து அங்குள்ள இலையில் அதை வைத்து வழிபாடு செய்தான். இதை தினந்தோறும் செய்யும் வழக்கமாகவும் பழகிக் கொண்டான்.
ஒருநாள் சிவாச்சாரியார் வந்த வேளையில் , குடுமி தேவர் முன்பு இறைச்சிகள் வைத்து படைக்கப்பட்டதை பார்த்து, அவர் பெரும் கோபம் கொண்டார். அதிர்ச்சியும் கொண்டார். எந்த "படுபாவி" இந்த பாதகத்தை செய்தது என பெறும் கோபம் கொண்டு அதை சுத்தம் செய்து அவரின் முறையில் குடுமி தேவருக்கு அபிஷேகம் முடித்து சென்றார். இருந்தாலும், அவரது மனம் வீட்டுக்குச் சென்ற பின்பும் சமாதானமாகவில்லை. திரும்பவும் மறுநாள் காலை குடுமி தேவர் கோயிலுக்கு வந்தார்.
அங்கு பழையது போலவே இறைச்சி படையல் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பேர் அதிர்ச்சி கொண்டார். யார்? இதை செய்தது என்று மனதிற்குள் கோபம் கொண்டு இதை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று இரவு முழுவதும் பெருமானிடம் விண்ணப்பம் வைத்தார். பெருமானும், சிவாச்சாரியார் துன்பம் காணாது கனவில் தோன்றி யார்? என்பதை மறுநாள் வந்து மரத்திற்கு பின்னால் நின்று பார் தெரியும் என்று கனவில் ஒளித்து சென்றார்.
சிவாச்சாரியும் ,மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து கனவில் சிவபெருமான் சொன்னதை போலவே ஒரு மரத்திற்கு பின் ஒளிந்து நின்று கொண்டார்.
அப்போது ,எப்போதும் போல திண்ணன் வந்தான். வாயில் நீரும், தலையில் காட்டுப் பூக்களும், கையில் சிறிதளவு இறைச்சியும் இருந்தது. இவன்தான் அந்த பாதகனா?என்று சிவாச்சியார் கோபம் கொண்ட வேலையில், ஒரு அதிசயம் சிவாச்சாரியார் கண்டார்.
சிவபெருமான் தன் கண்ணாமூச்சி ஆட்டத்தை துவங்கினார். அப்போது சிவலிங்கத்தின் ஒரு கண் பகுதியில் இருந்து ரத்தம் வருவதை திண்ணன் கண்டான். தான் ஏதோ குறை வைத்ததாகவும், அதனால்தான் திருமேனியிலிருந்து ரத்தம் வருவதாகவும், திண்ணன் குற்ற உணர்ச்சியில் திளைத்தான். பச்சிலைகளைக் கொண்டு வந்து ரத்தம் வந்த இடத்தில் வைத்தான். அப்போதும் ,ரத்தம் நிற்கவில்லை. என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டே தன் முகத்தில் இருந்த ஒரு கண்ணை யோசிக்காமல் பிடுங்கி சிவலிங்கத் திருமேனியில் கண் பகுதியில் ஒற்றினான். ரத்தம் வடிவது நின்று விட்டது. திண்ணன் தன் ஒரு கண் எடுத்து வைத்ததும் ரத்தம் நின்றவுடன் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தான். தனக்கு வலி என்பது உள்ளதை மறந்தே போனான். அப்படி ஒரு அன்பு குடுமி தேவர் மீது திண்ணனுக்கு.!
இதைக் கண்ட, சிவாச்சாரியார் ஒரு நிமிடம் ஆடிப் போனார். என்ன நடக்கின்றது? என்பது புரியாமல் குழம்பி நின்றார்!. ..
ஒரு கண்ணில் ரத்தம் நின்றவுடன் சிவலிங்கத் திருமேனியில் இடக் கண்ணில் இருந்தும் ரத்தம் வடிந்தது. சிறிதும் யோசிக்காமல் !வடிந்த ரத்தப் பகுதியை தன் செருப்பு காலால் அழுத்திக் கொண்டு தன்னுடைய இன்னொரு கண்ணையும் பிடுங்க தனது குருவாளை ஓங்கினான்."நில் கண்ணப்பா நில்" ஆம் ( கண்ணைப் பிடித்து அப்ப நினைப்பவனே நில் என்பது கண்ணப்பருக்கு பொருளாகும்).
நகையை கழட்டிக் கொடுப்பது போல தன் உடம்பில் உள்ள ஒரு பொருளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்,.. அன்பின் காரணமாக மட்டுமே! தனது கண்ணை இறைவனுக்கு காணிக்கையாக்கினார்! கண்ணப்பர். இதனாலேயே இவர் 63 நாயன்மார்களில் மிகவும் உயர்ந்தவராக கருதப்படுகிறார்.
சிவன் அவரின் பக்தியிலும் அன்பிலும் உருகி "நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக" எனச் சொல்லி தனது லிங்கத் திருமேனியிலேயே கண்ணப்பரின் ஆன்மாவையும் ஆட்படுத்தி கைலாயம் அழைத்துச் சென்றார்.
இவை அனைத்தும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிவாச்சாரியார். கண்ணப்பரின் இந்த அன்பான தியாகத்தில் தன்னை இழந்து கண்ணப்பரின் ஆன்மா சென் ற வழியில் தன்னை அனுஷ்டாகமாக சமர்ப்பித்தார். இந்த சிவாச்சாரின் சிவபக்தியின் மிகவும் உயர்ந்ததாகும். குடுமி தேவருக்கு நடந்தை சகிக்காமல், அவருக்காக தூங்காமல் தன்னை பக்தி வழியில் அர்ப்பணித்தவர் இந்த சிவாச்சாரியார். சந்தேகமின்றி இந்த சிவாச்சாரின் பக்தியுமே மிகவும் உயர்ந்ததாகும்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான 'திருக்களத்தி நாதன்' தான் கண்ணப்பர் வழிபட்ட குடுமித் தேவர் என சொல்லப்படுகிறது. ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் இக்கோயில் பெரும் கோயிலாக கட்டி முடிக்கப்பட்டது. என்று கூறப்படுகிறது.
தை மாதம், மிருகசீரிஷம் நட்சத்திரம் ,அன்று கண்ணப்பருக்கு குருபூஜை சிறப்பான முறையில் திருக்காளத்தியில் இன்றளவும் நடைபெற்று வருகிறது. சிவபெருமான் ,அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
Haiku by Ira Mumtaz Begum: கண்ணாடி பெட்டிக்குள்.. கண்ணீர் விடும் மீன்கள்!
கலைநிகழ்ச்சி களைகட்டுது.. பள்ளி வளாகம்.. ரசித்து பார்க்குது!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
{{comments.comment}}