சென்னை: தவெகவில் ஏகப்பட்ட அதிமுகவினர் இன்று இணைந்துள்ளனர்... இதனால் வேகம் வேகமாக அதிமுக மயமாக ஆரம்பித்துள்ளது தவெக.
தவெக ஆரம்பித்தபோது அதில் வேறு கட்சிகளைச் சேர்ந்த யாரையும் இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக பிற கட்சியாக அதிமுகவிலிருந்து கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்து சேர்ந்தனர்.
தேர்தலுக்குப் பிறகு இப்போது நிலைமை டோட்டலாக மாறி வருகிறது. அதிக அளவில் அதிமுகவினர் சரமாரியாக தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு இணைந்தனர்.
இந்த நிலையில் அதிரடியாக 4அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அதிமுக மாஜி எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன், கடலூர் முசி சம்பத், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, சங்ககிரி சுந்தரராஜ், சேலம் வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், சாத்தூர் ராஜவர்மன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோரும் இன்று தவெகவில் இணைந்தனர்.

பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வைத்து இவர்கள் அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். தங்களுக்கு எதுவுமே தேவையில்லை. மரியாதை மட்டும் போதும். தவெகவின் வருங்கால வெற்றிக்காக, முதல்வர் விஜய்யின் உத்தரவுக்கிணங்க பணியாற்றுவோம் என்று கட்சியில் இணைத்துக் கொண்ட முன்னாள் அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர்.
அதிமுகவை தவெக கரைக்க ஆரம்பித்துள்ளது என்ற பேச்சு எழுந்த நிலையில் தவெகவே தற்போது அதிமுகமயமாகி வருவது தவெகவினருக்கும் கூட ஒரு வகையில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடையாளம் மாறி விடுமோ என்ற அச்சமும் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
மறுபக்கம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக வேகமாக கரைய ஆரம்பித்திருப்பது அந்தக் கட்சியினரையும் அயர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்சியினர் பிரிந்து செல்லாமல் தடுக்க எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கட்சியினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}