கொச்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களின் உடல்கள் இன்று கொச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தன. 31 உடல்கள் மட்டும் கொச்சியில் இறக்கப்பட்டன. மற்ற 14 உடல்களுடன் விமானப்டை விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது.
குவைத்தில் மாங்காஃப் பகுதியில் 200 தொழிலாளர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்துள்ளனர். இதனால் உறவினர்களின் குடும்பத்தினர் மனவேதனையில் மூழ்கியுள்ளனர்.
தீவிபத்தில், தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமு (எ) கருப்பணன், திருச்சியை சேர்ந்த ராஜூ எபினேசர், தஞ்சையை சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், கடலூரை சேர்ந்த சின்னதுரை, கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் வீராசாமி, செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப், சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர் ஆகிய 7 தமிழர்கள் உட்பட மொத்தம் 45 இந்தியர்கள் இறந்ததாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களும் விமானப்படை விமானம் மூலம் இன்று கேரளாவின் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 31 உடல்கள் மட்டும் கொச்சியில் இறக்கப்பட்டன. இதில் 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரது உடல் மட்டும் இங்கு இறக்கப்பட்டன.
இவர்கள் தவிர ஆந்திரா, உத்தரப் பிரதேசம் தலா 3 பேர் ஆவர். ஒடிசா 2 பேர், ஹரியானா, ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து தலா ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையிலான தமிழ்நாட்டுக் குழு மேற்பார்வையிட்டது.
தமிழக அரசின் நிவாரணம்:

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு போதுமான உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 23 பேர் உயிரிழந்ததை அடுத்து அம்மாநில முதல்வர் பிரனாயி விஜயன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணத் தொகையும்,காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் அறிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}