ஜூன் 4க்கு பிறகு ராகுல் காந்தி காணாமல் போய்ருவார்.. இனி காங்கிரஸ் வெல்லாது.. எல்.முருகன்

May 30, 2024,05:54 PM IST

சென்னை: ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது. இதற்கான விடை ஜூன் 4ல் தெரிந்து விடும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இருப்பவர்கள் ஒடிசா அரசியலை பற்றி தவறாக தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். ஒடிசா முதல்வரை இயக்குவது ஒரு அதிகாரி. அவர் தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.




சென்னையில் பள்ளி சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா என்பதும் தெரியவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், தமிழக அரசு இருவரையும் அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். 


தமிழகத்தில் செயலற்ற முதல்வர் இருப்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. 


தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய வரலாறு படைக்கப் போகிறது. ஜூன் 4ம் தேதி பாஜகவுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கப்போகிறது. அந்த நாளுக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. இதற்கான விடை ஜூன் 4 தெரிந்து விடும். 


அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒவ்வொருவரின் கனவு. ஜெயலலிதாவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். சட்டப்பிரிவு 370 எப்போது நீக்கப்படும் என மாநிலங்களவையில்  அவர் பேசியிருக்கிறார். ஜெயலலிதா தொடர்ந்து, இந்துத்துவா மீதும், ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் மாநிலங்களவை குறிப்பில் இருப்பதை எடுத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,

news

அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!

news

பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

news

ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

news

தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!

news

வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

news

ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்