சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடியான காட்சிகளுடன் பட்டையைக் கிளப்புகிறது டிரெய்லர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜனனி, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்க லைக்கா தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற வேடத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ரஜினி பேசிய பேச்சுக்கள் இன்னும் வைரலாகவே உள்ளன. இந்த நிலையில் இன்று இரவு படத்தின் டிரெய்லர் வெளியானது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியுள்ள படமாக இதை ரஜினிகாந்த்தும், ஐஸ்வர்யாவும் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் அனல் பரப்புவதாக உள்ளன.
குறிப்பாக மொய்தீன் பாய், ரஜினிகாந்த் காட்சிகள் மாஸாக உள்ளன. படத்தை தூக்கி நிறுத்தப் போவதே மொய்தீன் பாயாகத்தான் இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு பட்டாஸாக இருக்கிறது ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ள காட்சிகள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம், பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}