புதுக்கோட்டை: நெடுந்தீவு பகுதியில் விசைப்படகுடன் அதிலிருந்த நான்கு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு விசைப்படகையும் மற்றும் அதிலிருந்த நான்கு மீனவர்களையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மீனவர்கள் நான்கு பேரையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனவர்கள் கைது, அவர்கள் மீது தாக்குதல், விசைப்படகுகள் படகுகள் பறிமுதல், மீனவர்களுக்கு அபராதம், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்வையாகவே இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் பார்க் நீர்நிலைப் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை கடற்பறையினரின் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}