சென்னை: புரட்சிக் கலைஞர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, அவரது புகைப்படத்துடன் கூடிய திருத்தேர் ஒன்றை ஈழத் தமிழர்கள் வடிவமைத்துள்ளனர். அந்தத் தேர் விரைவில் சென்னைக்கு வரவுள்ளது. இது குறித்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்.
இலங்கையைச் சேர்ந்தது நிதர்சன் சிற்பாலயம். இது கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். கடந்த 30 வருடமாக தேர்கள் உள்ளிட்ட இந்து மதம் சார்ந்த பல்வேறு பொருட்கள், சிற்பங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.
ஈழத் தமிழர்கள் சிலர் சேர்ந்து கேப்டன் விஜயகாந்த்துக்காக ஒரு திருத்தேரை நிர்மானித்துள்ளனர். அந்தத் தேரை நிதர்சன் சிற்பாலயம் கட்டியுள்ளது. அந்தத் தேரில் விஜயகாந்த் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தேர் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இந்தத் தேரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக வளாகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் (கேப்டன் ஆலயம்) நிர்மானிக்கவுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, இலங்கையில் உள்ள நிதர்சன் சிற்ப ஆலயத்தில் இருந்து அவரது புகைப்படத்துடன் கூடிய தேர் ஒன்று தத்ரூபமாக, கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்கள், புரட்சி கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், அவரின் புகைப்படத்துடன் இந்தத் தேரை சிறப்பான முறையில் வடிவமைத்து திறப்பு விழாவை நிகழ்த்தியுள்ளனர். இந்த தேர் விரைவில் கேப்டன் ஆலயத்தில் நிறுவப்பட உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் மற்றும் அந்த குழுமத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக பணிவான வணக்கங்களையும் நன்றிகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் இருந்தபோதும், மறைந்தபோதும், தமிழர்களின் மீது அவர் கொண்ட அளவுக்கடந்த பற்றும் மரியாதையும் உலகறிந்த உண்மையென்றே சொல்லலாம். இந்தத் தேரை உருவாக்கிய அனைத்து இலங்கை தமிழ் சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த தேர் திறப்பு விழாவில் நேரலையில் அவர்களோடு கலந்து கொண்டேன். இந்த நாளை என் வாழ்வில் மிகப்பெரிய ஒரு பெருமைக்குரிய நாளாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}