இன்றைய காலகட்டத்தில், மக்கள் திரைகளை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். அதாவது கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன், டிவி என எதிலும் திரையின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால், திரை சோர்வு என்ற ஒரு பிரச்சனை உருவாகிறது. இப்படிப்பட்ட திரை சோர்வை குறைக்க சில வழிகள் உள்ளன.
20-20-20 விதி, டெஸ்க் அமைப்பை மாற்றுதல், கண் பயிற்சிகள், வெளியில் நேரம் செலவிடுதல், நல்ல தூக்கம் போன்ற எளிய வழிகள் மூலம் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
திரை சோர்வு என்பது இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒரு பொதுவான பிரச்சனை. இதை கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்றும் அழைக்கிறார்கள். அதிக நேரம் திரையை பார்ப்பதால், கண்களைச் சுற்றி இருக்கும் தசைகள் சோர்வடைகின்றன. இது கண் வலி, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் மன சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்ணாடி அணிந்தவர்கள் மற்றும் அணியாதவர்கள் இருவருக்குமே இந்த பிரச்சனை வரலாம்.
திரை சோர்வு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. திரையில் ஏற்படும் ஒளி பிரதிபலிப்பு, மோசமான வெளிச்சம், தவறான உடல் நிலை, சரி செய்யப்படாத பார்வை குறைபாடுகள் மற்றும் மோசமான டெஸ்க் அமைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள். ஆனால், சில எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் திரை சோர்வை குறைக்கலாம்.
திரை சோர்வை குறைக்க சில எளிய வழிகள்:
- 20-20-20 விதியை பின்பற்றவும்: 20-20-20 விதி என்பது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 வினாடிகள் இடைவெளி எடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை பார்க்க வேண்டும். இந்த கண் பயிற்சி, கண்களைச் சுற்றி இருக்கும் தசைகளை தளர்த்தி, மீண்டும் கவனம் செலுத்த உதவுகிறது. "ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 வினாடிகள் இடைவெளி எடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை பார்க்க வேண்டும்" என்பது தான் 20-20-20 விதி.
- டெஸ்க் அமைப்பை மாற்றவும்: பெரிய கம்ப்யூட்டர் மானிட்டர் பயன்படுத்துவது கண் சோர்வை குறைக்க உதவும். லேப்டாப், மானிட்டர் அல்லது போனில் எழுத்து அளவை அதிகரிக்கலாம். அப்படி முடியவில்லை என்றால், ரீடிங் மோட்-ஐ ஆன் செய்து எழுத்து அளவை பெரிதாக்கவும்.
- கண் தசைகளுக்கு ஓய்வளிக்கவும்: வேலை முடிந்த பிறகு, கண் பயிற்சிகள் செய்வது நல்லது. கண்களை மூடி, மெதுவாக ஐந்து முறை கடிகார திசையிலும், ஐந்து முறை எதிர் கடிகார திசையிலும் சுழற்றவும். அடுத்து, 20 வினாடிகள் அருகில் உள்ள ஒரு பொருளையும், 20 வினாடிகள் தூரத்தில் உள்ள ஒரு பொருளையும் பார்க்கவும். இறுதியாக, 10-15 முறை தொடர்ந்து கண்களை சிமிட்டி, 10-15 வினாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.
- கண்ணுக்கு பிரகே் தேவை: கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வேலை செய்த பிறகு, சிலர் மொபைல் போனில் ஸ்க்ரோல் செய்கிறார்கள் அல்லது படிக்கிறார்கள். இது திரை சோர்வை இன்னும் அதிகரிக்கும். டேப்லெட் அல்லது மொபைலில் பார்ப்பதை விட, டிவி பார்ப்பது நல்லது. குறைந்தது 20 நிமிடங்களாவது வெளியில் சென்று பச்சை நிறத்தை பார்ப்பது கண் தசைகளை தளர்த்தும்.
- நல்ல தூக்கம்: கண்களுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுப்பது முக்கியம். தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு திரையை அணைத்து விடுங்கள். இரவில் சாதனங்களை "டார்க் மோட்"டில் வைக்கவும். வீடியோ பார்ப்பதற்கு பதிலாக, ஆடியோ புத்தகம் அல்லது போட்காஸ்ட் கேட்கலாம்.
திரை சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால், மேலே உள்ள வழிகளை பின்பற்றுவதன் மூலம், திரை சோர்வை குறைத்து, கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்.. குற்றவாளிகள் 9 பேருக்கும்.. சாகும் வரை ஆயுள் தண்டனை.. அதிரடி தீர்ப்பு!
திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்.. யார் யாருக்கு என்னென்ன தண்டனை?.. முழு விவரம்!
பொள்ளாச்சி தீர்ப்பு.. டிவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு மோதல்!
நடப்பாண்டில் முன் கூட்டியே துவங்கியது.. தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு எப்படி..?
10 மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
2027 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பே இல்லையா?
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாணவிகளே அதிகம் பாஸ்!
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள்.. தடுத்து நிறுத்தப்போவது எப்போது..டாக்டர் ராமதாஸ் கேள்வி
கோயம்புத்தூரில் நடைபெற இருந்த.. இசைஞானி இளையராஜா இசை கச்சேரி..ஜுன் 7ம் தேதி ஒத்திவைப்பு..!
{{comments.comment}}