தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!

Apr 14, 2026,04:16 PM IST
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed

விடுமுறையில் நம் குழந்தைகளின் பொழுதுபோக்கை எப்படி செய்யலாம் என்று யோசனை இருக்கிறதா? வாங்க வாரம் வாரம் ஒரு தலைப்பில் புதிய புதிய முறைகளை கற்றுக் கொள்வோம்.

சித்திரை ஒன்றாம் தேதி மங்களகரமான பூவோடு முதல் நிகழ்வு தொடங்குவோம். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள் அதைப்போல் குழந்தைகள்  பூ கோர்த்து பார்ப்பதும் மகிழ்ச்சியை தருகிறது. 

ஊசியால் பூவினை கோர்ப்பது என்பது தமிழர் பாரம்பரியத்தில் ஒரு அழகான கலையாக கருதப்படுகிறது. பூ கோர்ப்பதன் மூலம்  பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. 
 
பூக்களின் மணமும், கோரும் செயலும் மனதை அமைதியாக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. பூவினை கோர்ப்பது கவனமாக செய்ய வேண்டிய வேலையாகும். இதனால் கவனிக்கும் திறன் பொறுமையாக செயல்படும் திறன் அதிகரித்து காணப்படுகிறது.



குழந்தைகளுக்கு கை இயக்கம் நன்றாகப் பயிற்சி பெற்று நல்ல கற்றல் திறன் அதிகரித்து காணப்படும். பூக்களின் வாசனை மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதோடு நல்ல மனநிலையில் இருக்க உதவி செய்கிறது.

கோயில் வழிபாடு, திருமணம் போன்ற  விழாக்களில் முக்கிய பங்கு பூவினை தலையில் வைப்பதும், கோவிலுக்கு சாமிக்கு கொடுப்பதும் நம் பாரம்பரியமாக கருதப்படுகிறது. நாம் கைகளால் கோர்த்த பூவினை தலையில் சூடுவதும், இறைவனுக்கு கொடுப்பதும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

கடைகளில் கட்டிய பூவை வாங்குவதை விட நம் கைகளால் கோர்ப்பது சிறப்பாக இருக்கும் . நம் வீடுகளில் வளர்க்கப்படும் அழகு பூக்களை முதலில் குழந்தைகளை கோர்க்க பழகிய பிறகு நாம் கடையில் விற்கும் பூக்களை கோர்க்க கொடுத்த பழகிவிடலாம்.

நீங்களும் உங்கள் குழந்தைகளை பூ கோர்க்க  பழகுவீர்கள் தானே! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 
ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்