- ஸ்வர்ணலட்சுமி
அருள் தந்து காக்கும் அன்னை சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
மாங்கனி நகரம் சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடு நாயகமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு என்றும் காவல் தெய்வமாக அருள் பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா மிகப்பெரிய விழாவாக நடைபெறுகிறது. இந்த ஆடி திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது .
கோட்டை பிறக்கையிலே கூடப்பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி என்ற சின்னப்பக்கவுண்டரின் பாடல்கள் அம்மனின் மகிமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன், அம்மாபேட்டை மாரியம்மன்,செவ்வாய் பேட்டை மாரியம்மன், சஞ்சீவராயன் பேட்டை மாரியம்மன், சின்னக் கடைவீதி சின்ன மாரியம்மன், குகை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாப்பேட்டை மாரியம்மன்,ஆகிய எட்டு மாரியம்மன் களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள், சக்தி வாய்ந்தவள். இதனாலையே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.

சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன்களுக்கு தலைமையாகவும் விளங்குகிறாள். எனவே, சேலத்தில் அமைந்துள்ள எட்டு பேட்டைகளைக் கட்டியாளும் "அன்னை கோட்டை மாரி" என்ற சிறப்புப் பெயரும் இவளுக்கு உண்டு.
சேலம் கோட்டை பெரிய மாரி அம்மன் அருளே வடிவமாக,காவல் தெய்வமாக சேலம் மக்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் சிரசில் ஜுவாலா கிரீடம்,அக்னி ஜுவாலையுடன் ஒலி வீசிக் கொண்டிருக்கின்றது. அக்ரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது.நான்கு கரங்களுடன் அன்னை விளக்குகிறாள். வலது மேற்கரத்தில் நாக பாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாக வீற்றிருக்கிறாள். இடது கீழ்க்கரத்தில் கபாலம் காணப்படுகிறது.
அன்னை வலது காலை தொங்கவிட்டு கொண்டு இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக்கொண்டு, ஈசான திசை நோக்கி அமைதி வடிவமாய், ஆனந்தம் பொங்கும் முகத்தாளாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு என்றும் அருளாட்சி செய்து வருகின்றாள்.
இந்த அம்மன் கோவிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தனர். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக அருள்பாளித்து இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை, கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.
முன்பு இந்த கோவிலின் கருவறை சிறியதாக அமைந்திருந்தது. தற்போது அன்னை வீற்றிருக்கும் கருவரை கம்பீரமாய் உருவாகி உள்ளது அன்னை உயரமான கருவறையில் அமர்ந்து இருக்கிறாள்.
அம்மன் திருக்கோவிலில் பூ போட்டு வாக்கு கேட்பது என்பது பிரசித்தமானது. குடும்பத்தில் ஏற்படும் சிக்கல் தீருமா?..மக்கள் மகிழ்வுடன் வாழ்வார்களா?... மகன், மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுமா?... தாய்,தந்தைக்கு வந்திருக்கும் நோய் திருமா?..வேலை கிடைக்குமா?..என்று குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை அம்மனே தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் வெள்ளை, சிவப்பு நிறங்களில் பூக்களை பொட்டலங்களாக கட்டி அம்மனின் திருவடியில் வைத்து அதில் ஒன்றை எடுத்து பார்த்தால் நினைத்த பூ வந்தால், தாம் எண்ணி வந்த செயல் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் செல்வர். இதற்கு பூ போட்டு பார்த்தல் என்று பெயர். இவ்வாறு பூ போட்டு பார்த்து தங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் அம்மன் என்றும், துயர் கொண்டவர்களுக்கு பிரச்சினைகளில்,சிக்கி தவிப்பவர்களுக்கும் இத்திரு கோயிலுக்கு வந்து அம்மனை தரிசிக்க அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் அதற்கு தகுந்தார் போல் நேர்த்திக்கடனும் வேண்டுதலும் செய்து வருகின்றனர்.
மதம் என்பது நம்பிக்கை, சடங்குகள்,ஐதீகங்கள் ஆகிய மூன்று முக்கியமான அம்சங்களை கொண்டது. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நாம் நம்பிக்கை என்கிறோம். அதில் ஒன்றுதான் உண்மையை ஏற்றுக் கொள்வதாகும். நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவைகள் ஆகும் என்று கூறுவர் அறிஞர்கள்.
வரவிருக்கும் ஆடி மாதத்தில் அனைவரும் அம்மன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
Tamil Poem: பனித்துளி!
500 ஆண்டு பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்.. அருள் தந்து காக்கும் அன்னை!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
Girls' Education.. பெண் கல்வி.. சமூகத்தின் முக்கியத் தேவை.. டி. பிருந்தாவின் ஆய்வுக் கட்டுரை
Ratha yatra when god becomes human.. பூரி ரத யாத்திரையின் மகிமை!
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
{{comments.comment}}